தீபாவளி நாளன்று ஆதித்ய மங்கள யோகம் உருவானது! செவ்வாய்-சூரியன் ஆசி உங்களுக்குத்தான்

Aditya Mangal Yogam:  தீபாவளி நாளன்று ஏற்பட்டுள்ள ஆதித்ய மங்கள யோகத்தால் குபேரனைப் போல பணக்காரர்களாக மாறும் வாய்ப்புள்ள ராசிகள் இவை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 12, 2023, 08:42 AM IST
  • தீபாவளி நாளன்று ஆதித்ய மங்கள யோகம்
  • ஆயுஷ்மான் யோகம், சௌபாக்ய யோகத்தின் பலன்கள்
  • குபேரனைப் போல பணக்காரர்களாக மாறும் ராசிகள்
தீபாவளி நாளன்று ஆதித்ய மங்கள யோகம் உருவானது! செவ்வாய்-சூரியன் ஆசி உங்களுக்குத்தான் title=

இன்று தீபாவளி அன்று ஆதித்ய மங்கள யோகம் உருவானது. அன்னை லட்சுமி தேவியின் கருணையால் செல்வம் வந்து குவியும். தீபாவளி லக்ஷ்மி பூஜை நாளில், ஆயுஷ்மான் யோகம், சௌபாக்ய யோகம் மற்றும் ஆதித்ய மங்கள யோகம் ஆகியவற்றின் அரிய சேர்க்கை உருவாகிறது. ஜோதிடத்தின்படி, சில ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும்.

பாவளி பண்டிகை இன்று ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2023 அன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி நாளில் விநாயகர், அன்னை லட்சுமி மற்றும் குபேரர் வழிபாடு செய்யப்படுகிறது. தீபாவளி இந்து மதத்தில் மிகப்பெரிய பண்டிகை. மஹாலக்ஷ்மி யோகம், ஆயுஷ்மான் யோகம், சௌபாக்ய யோகம், ஆதித்ய மங்கள யோகம் உள்ளிட்ட பல சுப யோகங்கள் இந்த நாளில் உருவாகியுள்ளன. 

ஜோதிடத்தில் பார்வையில், இந்த ஆண்டு தீபாவளி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனால் பல ராசிக்காரர்களுக்கு தீபாவளி நாள் மிகவும் மங்களகரமானதாகவும் பலன் தருவதாகவும் அமையப் போகிறது. இந்த தீபாவளிக்கு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | எண்ணெய் குளியலும் முடி பாதுகாப்பும்! தீபாவளி கங்கா ஸ்னானம் ஆச்சா? கூந்தல் வளர டிப்ஸ்

இந்த 4 ராசிக்காரர்களுக்கும் தீபாவளி மிகவும் சிறப்பானது
 
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு இந்த தீபாவளி மிகவும் சிறப்பானது. தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் கடக ராசிக்காரர்கள், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். பரிசுகள் ஆடம்பரப் பொருட்களாக இருக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். விருந்தினர்கள் உங்கள் வீட்டிற்கு வருவார்கள்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு தீபாவளி மிகவும் சிறப்பானதாக இருக்கப் போகிறது. உங்கள் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் அதிர்ஷ்டத்தின் ஆதரவு எல்லா வேலைகளிலும் வெற்றியைத் தரும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் அதிகரிக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும். தீபாவளியின் போது, வீட்டை மிகவும் அலங்கரிப்பதில் ஆர்வம் அதிகமாகும். குடும்பத்தில் இருந்து வந்த விரிசல் நீங்கும். வியாபாரிகள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த தீபாவளி லட்சுமி தேவியின் அபரிமிதமான ஆசீர்வாதங்களைத் தரும். தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உங்களின் புகழ் உயரும். நிலுவையில் சிக்கியிருந்த பணமும் கிடைக்கும், இது மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். கடன் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். பழைய உடல்நலக் கோளாறுகளிலிருந்து விடுபடுவீர்கள்.

மேலும் படிக்க | நவம்பரில் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சுக்கிரன்

மகரம்: இந்த தீபாவளி மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை கொண்டு வரும். சமய காரியங்களில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். ஏதாவது ஒரு ஆலயத்திற்கு செல்லலாம். பிள்ளைகளிடமிருந்து சில சாதகமான செய்திகளைக் கேட்கலாம். அண்டை வீட்டாருடன் சுமுகமான உறவுகள் இருக்கும். பெரியவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். துணி வியாபாரிகள் பெரும் லாபம் பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்,  உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | தீபாவளிக்கு முன் 4 ராசிகளுக்கு பணமழை! கஜானாவை நிரப்ப சுக்கிரனும் சனியும் தயார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News