ஏழரை நாட்டு சனி பாடாய் படுத்துகிறதா... ஹனுமன் இருக்க பயமேன்!

ஏழரை நாட்டு சனியினால் பாதிக்கப்பட்ட அந்த ராசிக்காரர்கள் பொருளாதார, உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சனியின் தீய பார்வை வாழ்க்கையை அழிக்கிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 29, 2023, 07:37 PM IST
  • சனியின் தீய பார்வை வாழ்க்கையை அழிக்கிறது.
  • ராம் பக்தனான ஹனுமனை பூஜிப்பது சிறந்த பலனைத் தரும்.
  • சனியின் கோபத்தில் இருந்து விடுபட ஆஞ்சனேயரை வழிப்பட்டால் போதும்.
ஏழரை நாட்டு சனி பாடாய் படுத்துகிறதா... ஹனுமன் இருக்க பயமேன்! title=

சனி நீதியின் கடவுள் என்பதால், சனியின் அதிருப்தி வாழ்க்கையை அழித்து விடும். சில ராசிகளுக்கு ஏழை நாட்டு சனி அல்லது சனி திசை நடக்கிறது. இது தவிர ஜாதகத்தில் சனி அசுப நிலையில் இருந்தாலும் மோசமான பாதிப்புகள் ஏற்படலாம். இந்நிலையில், சில ராசிக்காரர்கள் சில பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும். இது சனியின் வக்ர பார்வையில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் தரும்.சனி பகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகம், ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் தங்கும் சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டு காலம் எடுத்துக்கொள்கிறார். எனவே தான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை தாழ்ந்தாரும் இல்லை என்கின்றனர் ஜோதிடர்கள். 

ஏழரை நாட்டு சனியினால் பாதிக்கப்பட்ட அந்த ராசிக்காரர்கள் பொருளாதார, உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சனியின் தீய பார்வை வாழ்க்கையை அழிக்கிறது. சனி கிரகம் கர்மத்திற்கு ஏற்ற பலனை கொடுக்கும் கிரகமாகும். ஜோதிட சாஸ்திரத்தில், ஏழரை நாட்டு சனியில் இருந்து விடுபடவும், சனி தோஷம், சனியின் தீய பார்வை ஆகியவற்றில் இருந்து தப்பிக்கவும் ராம் பக்தனான ஹனுமனை பூஜிப்பது சிறந்த பலனைத் தரும் என நம்பப்படுகிறது. சனியின் கோபத்தில் இருந்து விடுபட ஆஞ்சனேயரை வழிப்பட்டால் போதும். இந்த கலியுகத்தில் ஹனுமனை வழிபடுவது மூலம் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என நம்பப்படுகிறது. அனுமனின் திருநாமத்தை சொல்லி வழிபட்டாலே துன்பங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். 

பகவான் ஹனுமனுக்கு பொரி, அவல், கடலை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், பழங்கள், வாழைப்பழம், சர்க்கரை போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம். சனி தோஷம் நீங்க, அருகில் உள்ள ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாற்றி வழிபடுவது சிறந்த பலனைத் தரும். 

ஹனுமனுக்கு உகந்த சனிக்கிழமைகளிலும், செவ்வாய் கிழமைகளிலும், வெற்றிலையில் மாலை கட்டி சாற்றினால் வாழ்க்கையின் தடைகள் அனைத்தும் நீங்கும். மேலும் ஹனுமனுக்கு ஸ்ரீராம ஜெயம் என எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயல்களும் வெற்றியடையும் என்பது ஐதீகம்.

மேலும் படிக்க | வக்ர சனி, ராகு - கேது: வரும் 6 மாதங்கள் இந்த ராசிகளுக்கு கஷ்ட காலம்

ஆஞ்சனேயரை பூஜிக்கும் போது, அவருக்கான ஸ்லோகங்கள், மந்திரங்கள் மற்றும் அனுமன் சாலிசா போன்றவற்றை பாராயணம் செய்வதும் நல்ல பலனைத் தரும். அதோடு, பூஜை செய்யும் போது, ஹனுமனுக்கு இனிப்புகள், பழங்கள் மற்றும் வடை ஆகியவற்றை படைத்து வழிபடுதல் சிறப்பு. 

பகவான் ஹனுமனை போற்றிப் பாடுகையில், கம்பர், ஐம்புலன்களை வென்றவன், சூரியதேவனிடம் வேதங்களின் பொருள் உணர்ந்தவன், அஞ்சனையின் மைந்தனாகத் தோன்றியவன், ராமபிரானின் மலரடிகளை மறவாத மனம் கொண்டவன், நித்திய சிரஞ்சீவியாகத் திகழ்பவன் என போற்றுகிறார்.

சனிபகவானின் முன் எள் தீபம் ஏற்ற வழிபட்டு, தானம் செய்வது சிறந்த பலனைக் கொடுக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் சனிபகவான் மனம் குளிர்ந்து அருளை அள்ளி வழங்குவார் என்பது நம்பிக்கை.சனி தோஷம் நீங்க, உளுந்து, கறுப்பு எள், இரும்பு ஆகியவற்றை கருப்பு துணியில் நனைத்து எண்ணெயில் தோய்த்து, சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். இது நிவாரணம் தரும். சனி பகவானின் சாலிசாவைப் பாராயணம் செய்வதும் பலன் கொடுக்கும். ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி சாலிசா, சனி ஸ்தோத்திரம் அல்லது சனி தசரத்கிருத ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது நல்லது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | 4 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு சனியால் தொல்லை, மிகுந்த ஜாக்கிரதை தேவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News