மார்ச்சில் 5 கிரகங்களின் அபூர்வ நிகழ்வு, 6 ராசிகளுக்கு பொற்காலம், கோடீஸ்வர யோகம்

Planet Prediction in March: மார்ச் மாதம் நடக்கப் போகும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ராசி மாற்றம் 6 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கப் போகிறது. இந்த ராசிக்காரர்கள் எவை என்று பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 20, 2024, 05:49 PM IST
  • குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு செல்லலாம்.
  • சிம்ம ராசிக்கு வரும் மார்ச் மாதம் அதிர்ஷ்டமாக இருக்கும்.
  • உத்தியோகத்தில் வளர்ச்சி அடைந்து வருமானம் பெருகும்.
மார்ச்சில் 5 கிரகங்களின் அபூர்வ நிகழ்வு, 6 ராசிகளுக்கு பொற்காலம், கோடீஸ்வர யோகம் title=

வரும் மார்ச் மாதம் சூரியன், சுக்கிரன் உள்ளிட்ட பல பெரிய கிரகங்களின் தங்களின் ராசியை மாறப் போகின்றது, இந்த மாற்றம் புதன் கிரகத்துடன் தொடங்கும், அதன்படி முதல் கிரகப் பெயர்ச்சி மார்ச் 7 ஆம் தேதி மீனத்தில் புதன் பெயர்ச்சி அடையும் போது நிகழும். அதேபோல் மார்ச் 15 ஆம் தேதி இத் ராசியில் உதயமாகுவார். இதை தொடர்ந்து மார்ச் 7 ஆம் தேதி, சுக்கிரன் கும்ப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார், இதனால் கும்ப ராசியில் சனி மற்றும் சூரியனுடன் சுக்கிரன் சேர்க்கை நடைபெறும். இதற்குப் பிறகு, மார்ச் 14 அன்று, சூரியன் மீனத்தில் பெயர்ச்சி அடைவார், அங்கு புதன் கிரகத்துடன் சேர்க்கை ஏற்படும். அதேபோல் மார்ச் 15 அன்று, செவ்வாய் கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைக்கிறார். இறுதியாக பிப்ரவரி 11ஆம் தேதி கும்பத்தில் அஸ்தமனமான சனி, மார்ச் 18ஆம் தேதி மீண்டும் உதயமாகுவார். இந்நிலையில் மார்ச் மாதம் கிரககளின் ஏற்படும் மாற்றம் 6 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலனைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு எப்படிபட்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்...

ரிஷபம்: ரிஷப ராசிக்கு மார்ச் மாதம் நடக்க போகும் கிரக மாற்றம் பல நன்மைகளை தரும். பல மங்களகரமான செயல்களை செய்வீர்கள். குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு செல்லலாம். சுப நிகழ்ச்சிகள் நடைக்கலாம். ஆசிரியர்களின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள், போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். நல்ல வருமானத்துடன் கூடிய வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் இன்பம் இருக்கும். நிதி நிலை மேம்படும்.

கடகம்: கடக ராசிக்கு மார்ச் மாதம் சுப பலன்கள் கிடைக்கும். உயர்கல்விக்காக  வெளியூர் செல்லாம். நிதி நிலை முன்பை விட சிறப்பாகவே இருக்கும். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். அரசு அதிகாரிகளிடமிருந்து ஆதரவைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | குலதெய்வத்தை எப்படி வணங்கினால் வாழ்வில் வளம் பெறலாம்? தெரிந்துக் கொள்ளவேண்டியவை...

சிம்மம்: சிம்ம ராசிக்கு வரும் மார்ச் மாதம் அதிர்ஷ்டமாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கணவருடன் உறவு வலுவடையும். திருமணம் நிச்சயிக்கப்படலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மன அமைதியும், வாழ்க்கையில் மகிழ்ச்சி போன்றவை அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பண வரவு ஏற்படும். 

கன்னி: கன்னி ராசிக்கு மார்ச் மாதம் சிறப்பாக இருக்கும். இது வரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். வருமானம் இரண்டு மடங்கு உயரும். குடும்பத்தின் ஆதரவைப் பெறுவீர்கள், பிள்ளைகளும் அதிர்ஷ்டம் உண்டாகும். கல்வியில் சிறப்பாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் வளர்ச்சி அடைந்து வருமானம் பெருகும். 

விருச்சிகம்: விருச்சிக ராசிக்கு வரும் மார்ச் மாதம் அற்புதமாக இருக்கும். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கலாம். பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் செல்லலாம். 

கும்பம்: கும்ப ராசிக்கு மார்ச் மாதம் பலன் தரும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைக அனைத்தும் தீர்வுக்கு வரும். தைரியம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனி பகவானுக்கு பிடித்த ராசிகள்: அதிகம் படுத்தாமல் இவர்கள் மீது அருள் மழை பொழிவார் சனி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News