உலகத்தில் ஜோதிட நம்பிக்கை என்பது பரவலாக இருக்கிறது. ஜாதகங்களை கணிக்கும் முறைகள், ஜோதிடப் பார்வைகள், கிரகங்களைப் பற்றிய பார்வை என இது தொடர்பாக வெவ்வேறு பரிணாமங்கள் இருக்கலாம். எண் ஜோதிடம், வண்ணங்களின் அடிப்படையில் ஜோதிடம், பிறந்த மாதம் மற்றும் நாளை வைத்து சொல்லும் ஜோதிடம் என ஜோதிட கணக்கீடுகளும், கணிக்கும் முறைகளிலும் வெவ்வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
ஜோதிட கணக்கீடுகள்
சூரிய குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு கணிக்கும் முறை இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. நவகிரகங்களின் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் 12 ராசிகளுக்கான ஜோதிட பாரம்பரியத்தில், சனி நீதியின் கடவுள் என்றும், புதன் கிரகங்களின் இளவரசன் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
புதன் பெயர்ச்சி பிப்ரவரி 27
பிப்ரவரி 27-ம் தேதி, புதன் பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது. கும்ப ராசிக்கு செல்லும் புதன், அதே ராசியில் ஏற்கனவே சஞ்சரித்துக் கொண்டிருக்கும் நீதியின் கடவுளான சனி கிரகத்துடன் ஒரே வீட்டில் இருப்பார். ஒரே வீட்டில் இருக்கும்போது, இருவரின் சேர்க்கையால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும் அனைத்து ராசியினருக்கும் வெவ்வேறு மாற்றங்களைத் தரும்.
புதன் சனி இணைவு பலன்கள்
அதில், புதன் மற்றும் சனியின் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு அருமையான பலன்களைத் தந்து வாழ்க்கையில் வசந்தத்தை கொண்டுவரும். அந்த ராசியான ராசிக்காரர்களில் நீங்களும் உண்டா?
மேலும் படிக்க | Rahu Transit 2023: 3 ராசிகளின் நிம்மதியைக் கெடுக்க வரும் ராகு பெயர்ச்சி! 3 ராசிகளுக்கு எச்சரிக்கை
30 ஆண்டுகளுக்குப் பிறகு சனியுடன் இணையும் புதன்
30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் அமர்ந்திருக்கும் நிலையில் புதன் சஞ்சாரத்தினால் கும்ப ராசியில் சனியும் புதனும் இணைந்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஜோதிடத்தில், புதன் மற்றும் சனியின் இந்த சேர்க்கையானது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஏனெனில் சனி மற்றும் புதன் இடையே நட்பு உணர்வு உள்ளது. சனி மற்றும் புதன் சேர்க்கை 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் பலனளிக்கும்.
புதன்-சனி இணைந்திருப்பதால் யாருக்கு சுபபலன்?
கடகம்: புதனின் ராசி மாற்றத்தால் உருவாகும் சனி மற்றும் புதன் சேர்க்கை, கடக ராசிக்காரர்களுக்கு கல்வியில் ஊக்கத்தைக் கொடுக்கும். கல்வி என்றால் மாணவர்களுக்கு மட்டுமல்ல, கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கும். அது பணி அனுபவமாகவும் இருக்கலாம், அல்லது பயண அனுபவமாகவும் இருக்கலாம். பதவி உயர்வு ஏற்படும். சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சுற்றுலா செல்லலாம். பணம் சாதகமாக இருக்கும்.
மேஷம்: புதன் சஞ்சாரத்தால் உருவாகும் புதன்-சனி சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். வருமானத்தில் அபரிமிதமான அதிகரிப்பு ஏற்படும். எப்போதோ செய்த வேலைக்கான அங்கீகாரம், பாராட்டு மற்றும் நிதிப் பலன்கள் கிடைக்கும். வேலை-வியாபாரத்தில் அதிர்ஷ்டமான சூழ்நிலை உருவாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு புதன்-சனியின் சேர்க்கை அதிர்ஷ்டத்தைத் தரும். முடங்கியிருந்த வேலைகள் நடக்கும். உங்கள் திட்டங்கள் உங்களுக்கு ஏற்ப மாறும் சூழல் உருவாகும். வருமானம் அதிகரிக்கும், சுற்றுலா செல்லலாம். மாணவர்களுக்கும் சாதகமான காலம் இது. போட்டத் தேர்வுகளில் வெற்றி பெறலாம்.
ரிஷபம்: சனி மற்றும் புதன் சேர்க்கை ரிஷப ராசியினருக்கு தொழில், வியாபாரத்தில் குறிப்பாக நன்மை தரும். வேலை தேடுபவர்களுக்கு பதவி கிடைக்கும் என்றால், வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகம். இந்த நேரம் வியாபாரிகளுக்கும் நன்மைகளை தரும். பண வரவு சாதகமாக இருக்கும். புதிய வேலைகளைத் தொடங்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மேஷத்தில் இணையும் சுக்ரன் -ராகு! பங்குனியில் பிரச்சனைகளை சந்திக்கும் ‘சில’ ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ