Happy Diwali 2022: அன்புக்குரியவர்களுக்கு அனுப்பி மகிழ இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

Happy Diwali 2022: உறவுகளும், நண்பர்களும் ஒன்று சேர்ந்து, புத்தாடை உடுத்தி, இனிப்புகளை உட்கொண்டு, பட்டாசு கொளுத்தி தீபாவளித் திருநாளை கொண்டாடுகிறோம்.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 24, 2022, 08:16 AM IST
  • தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
  • பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் இந்த திருவிழாவுக்கான வாழ்த்துகள், செய்திகள், மற்றும் படங்களைப் பகிர்ந்து இந்த நிகழ்வைக் கொண்டாடுங்கள்.
  • தீபாவளி 2022: வாழ்த்துக்கள் மற்றும் செய்திகள் இதோ
Happy Diwali 2022: அன்புக்குரியவர்களுக்கு அனுப்பி மகிழ இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!! title=

தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. நமது நாட்டில் பல வகையான திருவிழாக்களும் பண்டிகைகளும் கொண்டாடப்பட்டாலும், தீபாவளிக்கு என்றுமே தனிச்சிறப்பு உண்டு. இருளை போக்கி ஒளியை பரவச்செய்யும் தீபாவளி பண்டிகை அனைவருக்கும் பிடித்தமான பண்டிகையாகவும் உள்ளது. உறவுகளும், நண்பர்களும் ஒன்று சேர்ந்து, புத்தாடை உடுத்தி, இனிப்புகளை உட்கொண்டு, பட்டாசு கொளுத்தி இந்த நாளை நாம் கொண்டாடுகிறோம். 

தென் இந்தியாவில், நரகாசுரன் மீது கண்ணன் பெற்ற வெற்றியை தீபாவளியாக கொண்டாடுகிறோம். வட இந்தியாவில் ராவணனை வதம் செய்துவிட்டு ராமர் அயோதிக்கு திரும்பிய நாளை தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். தீபாவளி சமயத்தில் கேதார கௌரி விரதம் இருப்பது வழக்கம். இந்தியா முழுவதும் தீபாவளி நாளில் லட்சுமி குபேர பூஜை செய்வது சமீக ஆண்டுகளில் பிரபலமாகி வருகிறது. 

பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் இந்த திருவிழாவுக்கான வாழ்த்துகள், செய்திகள், மற்றும் படங்களைப் பகிர்ந்து இந்த நிகழ்வைக் கொண்டாடுங்கள். 

தீபாவளித் திருநாளில் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிமையான வாழ்த்துக்களை அனுப்ப விரும்புகிறீர்களா? ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் சமூக ஊடகங்களில் தீபாவளி வாழ்த்துக்களை பகிர ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், சில இனிமையான வாழ்த்துக்களின் தொகுப்பை உங்களுக்காக இந்த பதிவில் கொடுத்துள்ளோம். இவற்றை அனுப்பி அனைவருடனும் உங்கள் மகிழ்ச்சியையும், அன்பையும் பரிமாறிக்கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | நாடு முழுவதும் தித்திக்கும் தீபாவளி கொண்டாட்டம்: களைகட்டும் தீப ஒளியின் குதூகலம் 

தீபாவளி 2022: வாழ்த்துக்கள் மற்றும் செய்திகள் 

“உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.”

"இந்த தீபாவளித் திருநாள் உங்கள் வாழ்வை ஒளிமயமாக்கட்டும்.  தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!"

“அன்னை லட்சுமி தனது ஆசீர்வாதங்களை உங்கள் மீது பொழியட்டும். உங்கள் வாழ்க்கையை செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் வளப்படுத்தட்டும். உங்களுக்கு  தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!”

“உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்  மகாலட்சுமியின் சிறந்த ஆசீர்வாதங்கள் கிடைக்க எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள். வரும் ஆண்டில் நீங்கள் மேலும் செல்வம் மற்றும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியுடன் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.  தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!”

“தீபாவளி பண்டிகை உங்கள் இதயத்தையும் வீட்டையும் மகிழ்ச்சியுடன் பிரகாசமாக்கி வெற்றியின் வெளிச்சங்களால் நிரப்பும் என்று நம்புகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பான வாழ்த்துக்கள்!!”

“வரும் ஆண்டில் உங்களுக்கு வெற்றியையும் செல்வத்தையும் வழங்க இறைவன் எப்போதும் உடன் இருப்பார். உங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியான  தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!”

“லட்சுமி தேவி எப்போதும் உங்கள் இதயத்திலும் இல்லத்திலும் தங்கி, மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ உங்களுக்கு உதவட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய  தீபாவளி நல்வாழ்த்துக்கள்”

“இனிய  தீபாவளி நல்வாழ்த்துக்கள்! அன்னை லட்சுமி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வளமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்த வலிமை மற்றும் வாய்ப்புகளை வழங்கட்டும்.”

“எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு செழுமையையும் செழிப்பையும் தந்து ஆசீர்வதிப்பாராக. இனிய  தீபாவளி நல்வாழ்த்துக்கள்” 

“இதயங்களில் மகிழ்ச்சி, வீட்டில் செல்வம், மனதில் அமைதி என அனைத்தும் என்றும் நிலைத்திருக்க இனிய  தீபாவளி நல்வாழ்த்துக்கள்” 

“இந்த தெய்வீக சந்தர்ப்பத்தில் அன்னை லட்சுமியும் குபேரரும் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தை வழங்கட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்  தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!”

“இந்த தீபாவளி உங்கள் வாழ்வில் செல்வத்தையும், சுபிட்சத்தையும், மகிழ்சியையும் கொண்டு வரட்டும். வற்றாத செல்வமும் சந்தேஷமும் என்றும் நிலைத்து இருக்கட்டும். இனிய  தீபாவளி நல்வாழ்த்துக்கள்!” 

இந்த வாழ்த்து செய்திகளை அனுப்பி, மகிழ்ச்சியையும் இன்பத்தையும் பரிமாறிக்கொள்ளுங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

மேலும் படிக்க | நலிந்தோருக்கு உதவும் உணர்வு வளரட்டும் - குடியரசுத் தலைவரின் தீபாவளி வாழ்த்து 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News