தந்தேரஸ் திருநாளில் இந்த 5 பொருட்களை வாங்கினால் வீட்டில் பண மழை பொழியும்

Dhanteras 2022: தந்தேரஸ் நாளில் குறிப்பிட்ட சில பொருட்களை வாங்குவதால் நல்ல லாபம் கிடைக்கும், செல்வம் செழிக்கும். தந்தேராஸில் எதை வாங்குவது நல்லது, எது அசுபமானது என்று வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 22, 2022, 11:30 AM IST
  • தந்தேராஸில் இந்த 5 பொருட்களை வாங்கவும்.
  • தந்தேரஸ் நாளில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
  • விளக்குமாறு லட்சுமியின் வடிவமாக பார்க்கப்படுகின்றது.

Trending Photos

தந்தேரஸ் திருநாளில் இந்த 5 பொருட்களை வாங்கினால் வீட்டில் பண மழை பொழியும் title=

தீபத் திருநாளாம் தீபாவளிக்கு முந்தைய நாள் செல்வங்களை அள்ளித் தரும் தந்தேரஸ் கொண்டாடப்படுகின்றது. இதன் வழக்கம் தென் இந்தியாவில் அத்தனை இல்லை என்றாலும், வட மாநிலங்களில் மக்கள் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். அன்னை லட்சுமி, தன்வந்திரி பகவான் மற்றும் குபேரரின் அருள் வேண்டி இந்த நாளில் பூஜைகளை செய்கிறார்கள். இந்த ஆண்டு அக்டோபர் 23, ஞாயிற்றுக்கிழமை தந்தேரஸ் கொண்டாடப்படுகிறது. எனினும், அக்டோபர் 22 ஆம் தேதியும் திதி இருப்பதால், சிலர் இதை அக்டோபர் 22 அன்றும் கொண்டாடுகிறார்கள். 

தீபாவளிக்கு முன்னர் வரும் தந்தேரஸ் சுப நாளில் தன்வந்திரி பகவான் வணங்கப்படுகிறார். இந்த நாளில் லட்சுமி தேவியை வழிபடுவது நல்ல அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் தரும். விளக்குமாறு லட்சுமி தேவியின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த நாளில் வீட்டில் இதை வாங்கினால் வீட்டில் எப்போதும் லட்சுமி தேவி வாசம் செய்வார் என்பது ஐதீகம்.

ஐப்பசி மாதத்தின் தேய் பிறையில் வரும் திரயோதசி தினத்தன்று தந்தேராஸ் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விளக்குமாறு, தங்கம், வெள்ளி, பாத்திரங்கள் மற்றும் நகைகளை வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் மக்கள் பல விதமான பொருட்களை வாங்குகிறார்கள். எனினும், தந்தேரஸ் நாளில் குறிப்பிட்ட சில பொருட்களை வாங்குவதால் நல்ல லாபம் கிடைக்கும், செல்வம் செழிக்கும். தந்தேராஸில் எதை வாங்குவது நல்லது, எது அசுபமானது என்று வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்துள்ளது. அதைப் பற்றி அனைவரும் தெரிந்துகொண்டு நன்மை அடைய இந்த பதிவு உதவியாக இருக்கும்.

தந்தேராஸில் இந்த 5 பொருட்களை வாங்கவும்

1. தங்கம் மற்றும் வெள்ளி

தந்தேரஸ் நாளில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் வாங்கும் பொருட்கள் எதிர்காலத்தில் பன்மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி லட்சுமி தேவி மற்றும் வினாயகர் உருவங்கள் கொண்ட நாணயங்களை இந்த நாளில் வாங்கி பணப்பெட்டியில் வைத்தால், வாழ்க்கையில் என்றும் பணத்துக்கு குறை இருக்காது என்பது ஐதீகம்.

2. விளக்குமாறு

தந்தேராஸ் நாளில் விளக்குமாறு வாங்குவதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. விளக்குமாறு லட்சுமியின் வடிவமாக பார்க்கப்படுகின்றது. இந்த நாளில் துடைப்பம் வாங்குவதன் மூலம் வறுமை, துன்பம் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் மற்றும் பொருளாதார சிக்கல்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

மேலும் படிக்க | சனி பகவானின் மாற்றம்: இந்த ராசிகளுக்கு மகாலட்சுமியின் ஆசி கிடைக்கும், செல்வம் பெருகும் 

3. வாகனம்

தந்தேரஸ் நாளில் வாகனம் வாங்குவது மங்களகரமானது என்பது ஐதீகம். ஆகையால், நீங்கள் கார், பைக் அல்லது ஸ்கூட்டர் போன்றவற்றை வாங்க திட்டமிட்டிருந்தால், அதை வாங்குவதற்கு தந்தேரஸ் சரியான நாளாக இருக்கும்.

4. மகாலட்சுமி மற்றும் விநாயகர் சிலை

தந்தேராஸ் தினத்தன்று மகாலட்சுமி மற்றும் விநாயகர் சிலைகளை வாங்குவது நல்லது. இது வீட்டில் நல்ல அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும். வீட்டில் உள்ள கெட்ட அம்சங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல, இந்த சிலைகளின் வீரியம் உதவும். தந்தேரஸ் அன்று இவற்றை வாங்குவதால், இவற்றின் நேர்மறை ஆற்றல் பன்மடங்காக அதிகரிக்கும். 

5. பித்தளை சாமான்கள்

புராணங்களின்படி, பாற்கடலைக் கடைந்தபோது, தன்வந்திரி பகவான் தோன்றிய சமயத்தில், அவர் கைகளில் அமிர்தம் நிறைந்த ஒரு பித்தளை கலசம் இருந்தது. தன்வந்திரி பகவானுக்கு பித்தளை பிடிக்கும் என்று நம்பப்படுகிறது. ஆகையால், இந்த நாளில் பித்தளை பொருட்களை வாங்குவது நல்லது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலானவை. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.) 

மேலும் படிக்க | தீபாவளி 2022 லட்சுமி குபேர பூஜை: எப்போது எந்த முறையில் செய்ய வேண்டும்? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News