நவராத்திரி : இந்திய ஒற்றுமையைக் குறிக்கும் பண்டிகை - வெவ்வேறு பெயர்கள்; வெவ்வேறு கொண்டாட்டங்கள்

வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டத்தை இன்னும் அழகாக்குவது என்னவென்றால், வெவ்வேறு மாநிலங்களில், இப்பண்டிகைக்கு வெவ்வேறு பெயர்கள் மற்றும் வெவ்வேறு சடங்குகள் இருப்பதுதான்.

Written by - Sudharsan G | Last Updated : Sep 29, 2022, 07:14 PM IST
  • நவராத்திரி, சக்தி தேவி மற்றும் அவரின் ஒன்பது அவதாரங்களை வணங்குவதற்காக கொண்டாடப்படுகிறது.
  • துர்கா பூஜை என்பது, துர்கா தேவி கைலாச பர்வதத்தில் இருந்து தனது தாய் வீட்டிற்கு வருவதைக் குறிக்கிறது.
நவராத்திரி : இந்திய ஒற்றுமையைக் குறிக்கும் பண்டிகை - வெவ்வேறு பெயர்கள்; வெவ்வேறு கொண்டாட்டங்கள் title=

நாடு முழுவதும் நவராத்திரி விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி (அ) துர்கா பூஜை என்று அழைக்கப்பட்டாலும்,  உணவு வகைகள், வண்ணங்கள் உடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுவதே ஆகும். நவராத்திரியை குடும்பத்துடன் கொண்டாட மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதுதால் தான், மக்களிடையே இது பரவலாக கொண்டாடப்படுவதற்கு மற்றொரு காரணமாக உள்ளது.  

ஒன்பது இரவுகள் என்று பொருள்படும் நவராத்திரி, சக்தி தேவி மற்றும் அவரின் ஒன்பது அவதாரங்களை வணங்குவதற்காக கொண்டாடப்படுகிறது. துர்கா பூஜை என்பது, துர்கா தேவி கைலாச பர்வதத்தில் இருந்து தனது தாய் வீட்டிற்கு வருவதைக் குறிக்கிறது. இந்தியா அதன் பன்முகத்தன்மைக்கு பேர் பெற்றது. இந்தியா பன்முகத்தன்மை கொண்டதாக இருந்தாலும், கலாச்சாரம், பண்டிகைகள், கொண்டாட்டங்கள், சகோதரத்துவம் ஆகியவற்றால் இந்தியா ஒன்றுபட்டுள்ளது என்பது நம் அனைவருக்கும் பெருமையாகும். நம்ப முடியவில்லையா? சரி, துர்கா பூஜையை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். 

இந்த விழா வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டத்தை இன்னும் அழகாக்குவது என்னவென்றால், வெவ்வேறு மாநிலங்களில், பண்டிகைக்கு வெவ்வேறு பெயர்கள் மற்றும் வெவ்வேறு சடங்குகள் இருப்பதுதான்.நாட்டின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதை இந்த தொகுப்பு விளக்குகிறது.

மேலும் படிக்க | நவராத்திரியில் புதனின் பெரிய மாற்றம்: பண மழையில் நனையப்போகும் ராசிகள் இவைதான்

வட இந்தியா

வட இந்தியாவில், இராவணனை இராமன் வென்றதைக் குறிக்கும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. மனைவி சீதா மற்றும் சகோதரன் லட்சுமணனுடன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் கழித்த பிறகு ராமர் அயோத்திக்குத் திரும்பினார். திருவிழாவைக் கொண்டாட, மக்கள் இனிப்புகள் மற்றும் உணவுப் பொருட்களை கடவுளுக்கு வழங்குகிறார்கள். அம்மனை வழிபட மக்களும் விரதம் கடைப்பிடிக்கின்றனர்.

கிழக்கு இந்தியா

வட இந்தியாவிற்குப் பிறகு, கிழக்கு இந்தியா  குறித்தும், அங்கு எப்படி துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது என்பது குறித்தும் பார்ப்போம். மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் நவராத்திரி என்பது துர்கா பூஜையாக கொண்டாடப்படுகிறது. வடகிழக்கு மற்றும் மேற்கு வங்க மக்கள், குறிப்பாக துர்கா தேவி மகிஷாசுரனை வென்றதை குறிக்கும் வகையில் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். 

இந்த நாட்களில் பெண்கள், வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ள புடவைகளை அணிவார்கள். விளக்குகளால் தங்களின் வீடுகளை அலங்கரிப்பார்கள். மஹால்ய மற்றும் பிஜோய தசமி நாளில் இருந்து, சுவையான உணவு மற்றும் பல்வேறு சடங்குகள் இருக்கும் பந்தல்கள் அமைக்கப்படும். 
பிஜோய தசமி நாளில், துர்கா தேவியின் சிலைகள் தண்ணீரில் கரைக்கப்படும். 

மேற்கு இந்தியா

நவராத்திரி என்பது மேற்கு இந்திய பகுதிகளில் குறிப்பாக குஜராத்தின் மிக முக்கியமான பண்டிகை. சக்தி தேவியை வழிபட பெண்கள் விரதம் கடைபிடிக்கிறார்கள். ஒவ்வொரு வீடும் அலங்கரிக்கப்படும். குஜராத்தின் பாரம்பரியமான கர்பா நடன நிகழ்வுகள் நடக்கும். ஆண்களும் பெண்களும் தங்களின் தாண்டியாக்களுடன் பொது இடங்களில் நடமாடுவார்கள். 

தென்னிந்தியா

தென்னிந்தியாவில் திருவிழாவைக் கொண்டாடுவதற்கு என்று தனி வழி உள்ளது. நவராத்திரியை கொண்டாடும் வகையில் வீடுகளில் பல்வேறு பொம்மைகள் மற்றும் சிற்பங்கள் 'கொலு' என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. தென்னிந்தியாவிலுமே நவராத்திரி பண்டிகைக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. கர்நாடகாவில், கொலு என்பது பாம்பே ஹப்பா என்று பிரபலமாக அறியப்படுகிறது. தமிழ்நாட்டில் பொம்மை கொலு என்று அழைக்கப்படுகிறது. இதற்கிடையில் கேரளா இதை பொம்மா குல்லு என்றும், ஆந்திராவில் பொம்மலா கொலுவு என்றும் அழைக்கப்படுகின்றனர். 

மேலும் படிக்க | வட இந்தியாவில் அன்னையின் 9 நவராத்திரி ரூபங்கள்! 2ம் நாள் பிரம்மச்சரிணி தேவி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News