சனி பகவானுக்கு இஷ்டமான ராசிகள்; இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும்

ஜோதிடத்தில் ஆசானாக இருக்கும் கிரகமான சனி பகவான், எந்தவொரு பலனையும் இரட்டிப்பாக கொடுப்பார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 13, 2022, 06:26 AM IST
  • சனி பகவானுக்கு பிடித்தமான ராசிகள்
  • இந்த நபர்களை எல்லாம் சனி பகவானுக்கு பிடிக்கும்
சனி பகவானுக்கு இஷ்டமான ராசிகள்; இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும் title=

ஒருவரின் கர்ம பலன்களை சரியான நேரத்தில் தரக்கூடிய சனி பகவானை பொதுவாக சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிபடுவது நல்லது. சுதர்சன எந்திர வழிபாடு அவருக்கு பிடித்த ஒன்று. சனி பகவான் மீது பொதுவாக அனைவருக்கும் இருக்கும் பயம் என்னவென்றால், சுமார் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜென்ம ராசியில் ஏழரை சனியாக சஞ்சரிப்பார். அந்த காலத்தில் அவரவர் கர்ம பலன்களுக்கு ஏற்ப நற்பலன் மற்றும் கெடுபலனை கொடுப்பார். பலருக்கும் இருக்கும் ஒரே சந்தேகம் அனைவருக்கும் பாரபட்சமில்லாமல் பாடம் புகட்டும் சனி பகவானுகு பிடித்தவர்கள் யார்? என்ற கேள்வி இருக்கிறது.  

உண்மை என்னவென்றால் சனி பகவானுக்கு பிடித்தவர்களும் இருக்கிறார்கள். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் உச்சரிப்பவர்களைச் சனி பகவான் எப்போதும் பாதிப்பதில்லை. காகத்திற்கு அன்னம் இடுபவர்களையும், பித்ரு கடன்களை தவறாமல் செய்பவர்களையும் சனி தொந்தரவு செய்வதில்லை. இந்த விஷயத்தில் சரியாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும், சனி பகவானின் கருணை பார்வை அவர்களுக்கு கிடைக்கும். 

மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் சிக்கப்போகும் ராசிகள் இவைதான்: இந்த பரிகாரங்கள் உதவும்

பசுவின் பால், நெய், தயிர் ஆகியவற்றை வைத்து பூஜிப்பவர்களை சனி பகவானுக்கு மிகவும் விரும்புவார். குல தெய்வ வழிபாடும், சிவ பூஜை செய்பவர்களுக்கு சனி பகவான் துன்பத்தைத் தரமாட்டார். ஒருவேளை துன்பம் நேர்ந்தாலும் பாதுகாப்பு கொடுப்பார். எப்போதும் தர்மத்தின் வழியிலும், சத்தியம் தவறாதவர்களிடத்தில் மகாலட்சுமி குடிகொண்டிருப்பார். அத்தகைய நபர்களிடத்தில் சனி பகவான் அருகில் கூட செல்லமாட்டார். இந்த முறை சனிப்பெயர்ச்சி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | Name Astrology: இந்த '5' எழுத்துகள் உங்கள் பெயரில் உள்ளதா? அப்போ அதிர்ஷ்டசாலி நீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News