நாளை முதல் இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

Shukra Gochar 2022: செல்வம்-ஆடம்பரம், அன்பு-அழகு ஆகியவற்றைக் கொடுக்கும் கிரகமான சுக்கிரன் நாளை டிசம்பர் 5, 2022 அன்று பெயர்ச்சியாகப் போகுகிறார். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 4, 2022, 06:07 PM IST
  • சுக்கிரன் பெயர்ச்சி 2022.
  • 3 நாட்கள் வரை மிகவும் கவனமாக இருக்கனும்.
  • இவர்களின் வாழ்க்கையில் குழப்பம் உண்டாக்கும்.
நாளை முதல் இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் title=

வேத ஜோதிடத்தின்படி, சுக்கிரன் கிரகம் 5 டிசம்பர் 2022 திங்கட்கிழமை தனது ராசியை மாற்றப் போகிறது. சுக்கிரனின் ராசி மாற்றம் 12 ராசிகளுக்கும் சுப, அசுப பலன்களை ஏற்படுத்தும். சுக்கிரன் விருச்சிக ராசியை விட்டு தனுசு ராசியில் இடப் பெயர்ச்சியாகப் போக்குகிறார். மேலும் 29 டிசம்பர் 2022 வரை தனுசு ராசியில் இருப்பார். இதன் போது சுக்கிரன் 5 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கலாம். சுக்கிரனின் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மோசமான விளைவை ஏற்படுத்தப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம். 

இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் 

மிதுனம்: சுக்கிரன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். அதே சமயம் பணியிடத்திலும் மன அழுத்தம் ஏற்படும். பணிச்சுமை அதிகரித்துக்கொண்டே போகும். எச்சரிக்கையுடன் வேலை செய்யுங்கள். பொருளாதார நிலையிலும் எதிர்மறையான தாக்கம் ஏற்படலாம். தேவையற்ற செலவுகள் ஏற்படும்.

மேலும் படிக்க | ஏழரை சனியால் பாதிப்பா? இந்த பரிகாரங்கள் போதும், அள்ளிக்கொடுப்பார் சனி பகவான் 

கடகம்: சுக்கிரனின் ராசி மாற்றம் உங்களின் இரகசிய எதிரிகளை செயல்படுத்தும். எதிரிகள் உங்களுக்கு தீங்கு செய்ய முயற்சி செய்யலாம். பணியிடத்தில் கவனமாக இருக்கவும். பட்ஜெட் பார்த்த பிறகுதான் செலவு செய்ய வேண்டும்.

துலாம்: சுக்கிரனின் ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு கடினமான காலங்களை தரும். முதலீடு செய்வதற்கு முன் நூறு முறை யோசியுங்கள். கடின உழைப்பால் மட்டுமே வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களுடன் பக்கம் இருக்காது.

தனுசு: சுக்கிரன் பெயர்ச்சி தனுசு ராசியில் நடப்பதால், தனுசு ராசிக்காரர்களுக்கு இது சுபப் பலன் தரும் என்று கூற முடியாது, எனவே பொறுமையாக இருங்கள். உங்கள் பேச்சிலும் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். பொருளாதார நிலை மோசமடையலாம். 

மகரம்: சுக்கிரனின் ராசி மாற்றத்தின் போது மகர ராசிக்காரர்கள் கவனமாக நடக்க வேண்டிய காலமாகும். உங்கள் திட்டங்களை யாரிடமும் சொல்லாமல் அமைதியாக உங்கள் வேலையில் ஈடுபடுவது நல்லது. வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி விவகாரங்களை புத்திசாலித்தனமாக கையாளுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | டிசம்பரில் இந்த ராசிகள் மீது சனியின் நேரடி தாக்கம்: அதிகபட்ச எச்சரிக்கை தேவை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News