சனிக்கிழமை பரிகாரங்கள்: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர் சனி பகவான். ஆகையால் அவர் நீதியின் கடவுளாகக் கருதப்படுகிறார். மனிதர்களின் நற்செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு சனி நற்பலன்களையும் தீய பலன்களையும் வழங்குகிறார். சனியை போல் கொடுப்பவரும் இல்லை, கெடுப்பவரும் இல்லை என கூறுவார்கள். பொதுவாக சனியின் கோபப்பார்வை குறித்த அச்சம் அனைவருக்கும் இருக்கும். அவரது கோபத்தை யாரும் எதிர்கொள்ள விரும்புவதில்லை. சனியின் தாக்கத்தால் மக்கள் கடுமையான துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.
ஆகையால், சனியின் கோபப்பார்வை தங்கள் மீது படாமல் இருக்க வேண்டும் என்றே அனைவரும் நினைக்கிறார்கள். சனியின் தோஷத்தையும் தாக்கத்தையும் குறைக்கவும் அனைவரும் பல வித பரிகாரங்களை செய்கிறார்கள். இந்த பரிகாரங்களை செய்ய சனிக்கிழமை சிறந்த நாளாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த நாள் சனி பகவானுக்கு உகந்த நாளாகும். சனிக்கிழமையான இன்று, மூன்று கிரகங்கள் சுப யோகத்தை அளிக்கும் நிலையில் இருப்பதால், நவம்பர் 26ம் தேதி மிகவும் விசேஷமான் நாளாக பார்க்கப்படுகின்றது.
கிரகங்களின் சுபமான நிலை
சனிபகவானை மகிழ்விக்க சனிக்கிழமை மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் சனிபகவானை வழிபடுவதன் மூலம், அவர் விரைவில் மகிழ்ச்சியடைந்து, நல்ல பலன்களைத் தருகிறார். இன்று, அதாவது நவம்பர் 26, சனிக்கிழமை செவ்வாய் மாத சுக்ல பக்ஷத்தின் திரிதியை திதியில் வருகிறது. சந்திரன், விருச்சிகம் மற்றும் சூரியன் இந்த நாளில் நல்ல சேர்க்கையை உருவாக்குகின்றன.
மேலும் படிக்க | நெருங்கும் ஏழரை சனி: தாக்கத்தை குறைக்க இந்த எளிய பரிகாரங்கள் கண்டிப்பாக உதவும்
மூன்று கிரகங்களின் சேர்க்கை
நவம்பர் 26-ம் தேதி விருச்சிக ராசியில் மூன்று கிரகங்களின் சங்கமம் நடக்கிறது. இதில் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இருக்கும். மகர ராசியின் அதிபதியாக சனி கருதப்படுகிறது. நவம்பர் 26 அன்று, சனி தனது சொந்த ராசியில் அமர்ந்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனிபகவானின் அருள் எளிதில் கிடைக்கும்.
ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசை:
இந்த நேரத்தில் ஐந்து ராசிகளின் மீது ஏழரை நாட்டு சனியின் தாக்கம் உள்ளது. தனுசு, மகரம் மற்றும் கும்பத்தில் ஏழரை நாட்டு சனியின் தாக்கமும் மிதுனம் மற்றும் துலாம் ஆகியவற்றில் சனி தசையும் நடக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், இவர்கள் நவம்பர் 26 சனிக்கிழமையன்று சனிபகவானை வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
பரிகாரங்கள்
- சனி பகவானின் கோவிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள்.
- கோளறு பதிகம், சனி சாலிசா மற்றும் சனி பகவானின் மந்திரங்களை பாராயணம் செய்யலாம்.
- சனி பகவான் தொடர்பான பொருட்களை தானம் செய்தால் சனி மகிழ்ச்சி அடைகிறார்.
- ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.
- தொழுநோயாளிகளுக்கு சேவை செய்யுங்கள்.
- அரச மரத்தடியில் நீர் விட்டு, தீபம் ஏற்றி, மரத்தை சுற்றி வந்து வழிபடலாம். இதை தினமும் செய்யலாம் என்றாலும், சனிக்கிழமைகளில் செய்வது சிறப்பு நன்மைகளை அளிக்கும்.
- ஆஞ்சநேயரின் பக்தர்களை சனி பகவான் தொல்லைப்படுத்துவதில்லை. ஆகையால் ஏழரை சனி காலத்தில் ஹனுமான் சாலிசா பாராயணம் செய்வது நன்மை பயக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | டிசம்பரில் இந்த ராசிகளுக்கு தன ராஜயோகம்: கிரக மாற்றத்தால் எக்கச்சக்க பண வரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ