குரு பெயர்ச்சி 2023: ஏப். 22-க்கு பின் பிரச்னைதான்... இந்த 3 ராசியினருக்கு காத்திருக்கும் கடும் சவால்!

குரு பெயர்ச்சி 2023: வரும் ஏப். 22ஆம் தேதி உடன் சைத்ர மாதம் நிறைவடைய உள்ள நிலையில், அன்று குரு மேஷத்தில் நுழைகிறார். அன்று முதல் குரு சண்டாள யோகம் உருவாகும். 

Written by - Sudharsan G | Last Updated : Mar 25, 2023, 08:06 PM IST
  • குரு சண்டாள யோகத்தால் பல ராசிகள் பாதிக்கப்படும்.
  • இந்த யோகம் அடுத்த ஆறு மாதம் வரை இருக்கும்.
குரு பெயர்ச்சி 2023: ஏப். 22-க்கு பின் பிரச்னைதான்... இந்த 3 ராசியினருக்கு காத்திருக்கும் கடும் சவால்!

குரு பெயர்ச்சி 2023: குரு பகவான் வரும் ஏப்ரல் 22 அன்று மேஷ ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். அதாவது, வசந்த நவராத்திரி (வட மாநிலங்களில் கொண்டாடப்படும் நவராத்திரி) மாதமான சைத்ர மாதம் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. 

வரும் ஏப். 22ஆம் தேதி உடன் சைத்ர மாதம் நிறைவடைகிறது. நவராத்திரி ஆரம்பித்து சுமார் ஒரு மாதத்திற்கு பின்னர், குரு மேஷ ராசியில் நுழையும்போது குரு சண்டாள யோகம் உருவாகும். இந்த யோகம் பல ராசிக்காரர்களுக்கு கஷ்டங்களை உண்டாக்கப் போகிறது. அத்தகைய எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இங்கு அறிந்து கொள்ளுங்கள். 

குரு சாண்டாள் யோகம் என்றால் என்ன?

ஜோதிட சாஸ்திரப்படி எந்த ஒருவரின் ஜாதகத்திலும் குரு சண்டாள யோகம் உருவாகும் போது, அவரின் நல்ல குணங்கள் குறைந்து, எதிர்மறை குணங்கள் அதிகரிக்க ஆரம்பிக்கும். ஜாதகத்தில் உள்ள இந்த யோகம் அந்த நபரின் நல்ல குணத்தை பலவீனப்படுத்துகிறது. குரு சண்டாள யோகத்தால், ஜீரண மண்டலம், கல்லீரல் மற்றும் கடுமையான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

மறுபுறம், ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இந்த யோகம் இருந்தால், அவளுடைய திருமண வாழ்க்கை நரகமாகிவிடும். ஏப். 22ஆம் தேதி முதல் மேஷ ராசியில் இரண்டு கிரகங்கள் ஒன்றாக இருக்கும். ராகு ஏற்கெனவே மேஷ ராசியில் இருக்கும் நிலையில், ஏப்.22இல் குருவும் நுழைகிறார். இந்தச் சூழலில், இரண்டு கிரகங்களும் இணைந்து குரு சண்டாள யோகத்தை உண்டாக்கும்.

மேலும் படிக்க | ஏப்ரல் 6 சுக்கிரன் பெயர்ச்சி, இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்

கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்:

மேஷம்

இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த ஆறு மாதங்கள் மிகவும் வேதனையாக இருக்கப்போகிறது. இதன் போது வேலையில் தடைகள், ஏமாற்றம் போன்றவற்றை சந்திக்க வேண்டி வரும். பண இழப்புக்கான அறிகுறிகளும் தென்படும். இந்த நேரத்தில், ஒரு நபர் ஆரோக்கியத்தில் சரிவைக் காணலாம். மொத்தத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு இந்தக் காலம் நல்லதல்ல.

மிதுனம்

இந்த ராசிக்காரர்களும் அக்டோபர் மாதம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் சில கெட்ட செய்திகள் வரலாம். இதன் போது, நபருக்கு நிதி இழப்பு மற்றும் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. இவர்கள் அலுவலகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பொறுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

தனுசு

குரு சண்டாள யோகத்தின்போது, பணத்தால் மக்களுக்கு பாதகமான சூழ்நிலைகளை உருவாகும். இந்த நேரத்தில், ஒரு நபர் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்திலும் நஷ்டம் அல்லது நஷ்டம் ஏற்படலாம். மனதில் தெரியாத பயம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பிரச்சனைகள் வரலாம்.

மேலும் படிக்க | சனி பெயர்ச்சி 2023: சனி மகாதிசை..19 ஆண்டுகள் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News