ஏப்ரல் 6 சுக்கிரன் பெயர்ச்சி, இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்

Shukra Gochar 2023: சுக்கிரன் கிரகம் வருகிற ஏப்ரல் 6, 2023 அன்று காலை 10:50 மணிக்கு ரிஷப ராசியில் இடப் பெயர்ச்சி அடைவார். சுக்கிரனின் பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் சில விசேஷ பலன்களைத் தரும்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 25, 2023, 05:06 PM IST
  • ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி.
  • புதிய வீடு, சொத்து வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
  • தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
ஏப்ரல் 6 சுக்கிரன் பெயர்ச்சி, இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் title=

சுக்கிரனின் சுப பலன்களால் ஒருவருக்கு வாழ்க்கையில் பொருள் வசதி, பெருமை, புகழ் போன்றவை கிடைக்கும். ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துவதால், சுக்கிரனின் பெயர்ச்சி வேத ஜோதிடத்திலும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த கிரகம் ரிஷபம் மற்றும் துலாம் ஆகிய இரண்டு ராசிகளின் அதிபதியாவார். அந்த வகையில் சுக்கிரன் கிரகம் வருகிற ஏப்ரல் 6, 2023 அன்று காலை 10:50 மணிக்கு ரிஷப ராசியில் இடப் பெயர்ச்சி அடைவார். சுக்கிரனின் பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் சில விசேஷ பலன்களைத் தரும் என்றாலும், நான்கு ராசிகளுக்கு மட்டும் சுப பலன்களையும், பண பலத்தையும் அள்ளித் தருவார். அந்த நான்கு ராசிக்காரர்கள் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களுக்கு, குடும்பத்தின் இரண்டாவது மற்றும் பதினொன்றாவது வீட்டின் அதிபதி சுக்கிரன் ஆவார். இதனால் இந்த நரத்தில் இந்த ராசிக்காரர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதில் வெற்றி பெறுவார்கள். ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி செய்வது மேஷ ராசிக்காரர்களுக்கு சுமூகமான தொழில் வளர்ச்சியைத் தரும், புதிய வேலை வாய்ப்புகள் மகிழ்ச்சியைத் தரும். மேஷ ராசிக்காரர்களுக்கு பயணம் தொடர்பான வேலைகள் கிடைக்கும். பொருளாதார ரீதியாக, பணத்தை சேமிப்பது இந்த நேரத்தில் சாத்தியமாகும்.

மேலும் படிக்க | தினசரி ராசிபலன் - இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம்!

கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு நான்காம் மற்றும் பதினொன்றாம் வீட்டின் அதிபதி சுக்கிரன் ஆவார். இதனால் கடக ராசிக்காரர்களின் அனைத்து விதமான விருப்பங்கள் நிறைவேறும். புதிய வீடு, சொத்து வாங்கும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். பண பலன்கள் உண்டாகும். தொழில் ரீதியாக, புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், மேலும் கடின உழைப்புக்கான பதவி உயர்வு வடிவத்தில் அங்கீகாரம் பெற முடியும். வியாபாரிகள் அதிக லாபத்தையும் வெற்றியையும் பெறலாம்.

சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களுக்கு, சுக்கிரன் மூன்றாவது மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியாக குறிக்கும். இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி சாதகமாக இருக்கும். இடமாற்றத்தைப் பெறலாம், அதே நேரத்தில் மூத்தவர்களின் ஆதரவையும் பெறலாம். தனிப்பட்ட முறையில், இந்த ராசிக்காரர்கள் தங்கள் உடன்பிறந்தவர்களிடமிருந்து நல்ல ஆதரவைப் பெறலாம். புதிய வேலை வாய்ப்புகளில் திருப்திகரமான முடிவுகளை பெறலாம். மேலும், இந்த பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வுகள், பிற நன்மைகள் போன்றவற்றை அளிக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் அதிர்ஷ்ட கிரகம். கும்ப ராசிக்கு நான்காம் மற்றும் ஒன்பதாம் இடங்களுக்கு அதிபதியான சுக்கிரன் மிகவும் அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. தொழில் ரீதியாக, இந்த பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாக இருக்கும், மேலும் வேலை வாய்ப்புகளையும் அதிலிருந்து அங்கீகாரத்தையும் பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் அதிர்ஷ்டத்தைப் பெறலாம். புதிய தொழில் கூட்டாண்மைகளும் சாத்தியமாகும். புதிய சொத்து வாங்குவதில் பணத்தை முதலீடு செய்யலாம். சேமிப்பின் நோக்கமும் அதிகமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனியில் இருந்து தப்பிக்க... வீட்டில் வன்னி மரச்செடியை நடவும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News