குலதெய்வ சாபத்திற்கு தானமே பரிகாரமாக மாறுமா? தெய்வ தோஷத்திற்கான பரிகாரங்கள்!

Kuladeiva Sabham And Horoscope: குல தெய்வ அருள் இல்லை என்பதை கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், குலதெய்வ சாபம் என்பது என்ன? அதை எப்படி நிவர்த்தி செய்வது?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 10, 2024, 03:54 PM IST
  • குலதெய்வ சாபம் என்றால் என்ன?
  • தானமே பரிகாரமாக மாறுமா?
  • தானத்தில் சிறந்தது அன்னதானம்
குலதெய்வ சாபத்திற்கு தானமே பரிகாரமாக மாறுமா? தெய்வ தோஷத்திற்கான பரிகாரங்கள்! title=

குல தெய்வ சாபம் என்பது என்ன? என்பது பலரின் மனதிலும் எப்போதும் எழும் கேள்வியாக இருக்கிறது. உண்மையில் குலதெய்வத்தை வணக்காமல் வேறு எந்த தெய்வத்தை வணங்கினாலும் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. குலதெய்வ உத்தரவு இல்லை என்றால் எந்த தெய்வமும் துணை நிற்காது. நேரம் நன்றாக இருந்தாலும் சரியான நேரத்தில் தெய்வத்தின் துணை இல்லாமல் எதுவும் சரியாக நடக்காது.

எந்தவொரு நிலையிலும், இக்கட்டான சூழ்நிலையிலும், உயிர் காக்க துணை நிற்பதும் தக்க சமயத்தில் உதவக்கூடிய தெய்வம் குலதெய்வம் ஆகும். பெற்றோரை கவனிக்காமல் தவிக்கவிடுவது, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பணங்களை போன்ற சாஸ்திர சம்பிரதாயங்களை முறையாக செய்யாமல் விடுவது என குடும்பத்திற்கான கடமைகளை செய்யாமல் இருப்பதால் குடும்பத்திற்கு குலதெய்வ சாபம் ஏற்படும்.

குலதெய்வ சாபம் என்பது ஒருவரின் ஜாதகத்தில் தெரியுமா என்ற கேள்விக்கு, ஆமாம் என்பதே பதில். சரி, ஜாதகத்தின் எந்த பாவகத்தில் எந்த கிரகம் இருந்தால் குலதெய்வ சாபம் இருப்பது தெரியும் என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம். 

வயதான காலத்தில் கைவிடுவது, முன்னோர்கள் இறந்த பின்பு அவர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பணங்களை முறையாக செய்யாமல் விடுவது, போன்ற தவறுகளை நீங்கள் செய்தாலும் உங்கள் குடும்பத்திற்கு குலதெய்வ சாபம் ஏற்படும்

மேலும் படிக்க | Cancer Zodiac Sign: கடக ராசியின் வெளிவராத ரகசியம்.. விட்டுக்கொடுக்கும் குணமுடன் இருப்பார்களாம்

ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 7ம் பாவம் அல்லது 9ம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் குலதெய்வ சாபம் எனப்படும் தோஷம் ஏற்படும்.  துலாம் என்ற பாவத்திற்கு அதிபதி கிரகம் சுக்கிரன் என்பதால்,  குலதெய்வ தோஷத்தை  சுக்கிரனே குறிக்கிறார். குலதெய்வ தோஷம் அல்லது குலதெய்வம் சாபம் என்பது குல தெய்வத்தை வணங்கும் வழக்கத்தை கைவிட்டவர்களுக்கும் ஏற்படும். அல்லது குலதெய்வம் என்று நினைத்து வணங்கி வரும் தெய்வம் உண்மையிலுமே அவர்களது குலதெய்வமாக இல்லாமல், விருப்ப தெய்வமாக இருக்கலாம்.

குலதெய்வ ஆசீர்வாதம்  இல்லாமல், தோஷம் அல்லது சாபம் இருந்தால், வாழ்க்கையில் நிம்மதியோ சரியான நேரத்தில் ஆதரவோ அல்லது உதவியோ கிடைக்காது.  பிரச்சனை கஷ்டம் என்று வந்தால் உதவி செய்ய உறவுகள் சொந்த பநதங்கள் யாருமே முன்வர மாட்டார்கள் என்பது கவலைக்குரிய விஷயம் ஆகும். குலதெய்வ சாபம் இருந்தால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம்.

குலதெய்வத்துக்கு நேர்த்திக்கடன் இருந்தால், அவற்றை உடனுக்குடனே முடித்துக் கொள்ளவும். குடும்ப வழக்கப்படி, குலதெய்வத்தை வணங்க வேண்டும். சகல பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் தரும் குலதெய்வ வழிபாட்டை சரிவர செய்துவந்தாலே நிவாரணம் கிடைக்கும். அதோடு, அவரவர் குலதெய்வத்தின் தன்மைக்கு ஏற்ப பரிகாரங்கள் செய்ய வேண்டும்.

தானங்கள் செய்வது குலதெய்வ அருளைப் பெற்றுத்தரும். அதிலும் அன்னதானம் செய்வதும், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவதும் நல்லது. குடும்பத்தினரை மதிப்பதும், அவர்களுக்கு தேவையானவற்றை உரிய சமயத்தில் செய்வதும் பெரியவர்களை மதிப்பதும் குலதெய்வத்திற்கு செய்யும் முக்கிய பரிகாரங்கள் ஆகும்.

மேலும் படிக்க | நோய் பாதிப்பு ஏற்படுத்தும் கிரகம் எது? ஆரோக்கியத்தை உங்கள் வசமாக்கும் பரிகாரங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News