அமெரிக்க மத கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையை இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளை கண்டிக்கிறது, USCIRF அமைப்பிற்கு சரியான புரிதல் இல்லை என இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளை விமர்சித்துள்ளது. இந்தியா குறித்த USCIRF அறிக்கையில், இந்திய அரசாங்கத்தை ஆப்கானிஸ்தான், கியூபா, வட கொரியா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற "சர்வாதிகார ஆட்சிகளுடன்" USCIRF ஒப்பிட்டுள்ளது. சர்வதேச மத சுதந்திர அறிக்கை குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனின் கருத்துக்கு IMF பதிலளித்துள்ளது.
இந்தியா குறித்த யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் அறிக்கை
யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் அமைப்பு வெளியிட்ட இந்தியா குறித்த சர்வதேச மத சுதந்திர அறிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளை, USCIRF அறிக்கை தொடர்பான தனது கருத்தை தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்தியாவின் உலகளாவிய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த இந்த அறிக்கை முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய IMF, இந்தியாவின் ஜனநாயக அமைப்பு, துடிப்பான சிவில் சமூகம் மற்றும் பன்மைத்துவத்தை மத கண்காணிப்பு அமைப்பு புறக்கணித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
IMF strongly condemns the USCIRF'S International Religious freedom report. USCIRF's efforts to label India alongside authoritarian regimes like Afghanistan, Cuba, North Korea, Russia, and China overlook India's democratic framework, vibrant civil society, and pluralistic history.… pic.twitter.com/jHYGY6lPqp
— Indian Minorities Foundation (@Minoritiesfdn) June 27, 2024
USCIRF அறிக்கை
சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள அறிக்கையில் அப்படி என்ன தான் கூறப்பட்டுள்ளது? இந்தியாவை, ஆப்கானிஸ்தான், கியூபா, வட கொரியா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற "சர்வாதிகார ஆட்சிகளுடன்" USCIRF அமைப்பு ஒப்பிட்டுள்ளது. சர்வதேச மத சுதந்திர அறிக்கை குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனின் கருத்துகள் தவறானவை என IMF பதிலளித்துள்ளது.
’சர்வாதிகார ஆட்சி’ என்று இந்தியாவை முத்திரை குத்தும் USCIRF இன் முயற்சி, இந்தியாவின் ஜனநாயக அமைப்பையும், துடிப்பான சிவில் சமூகம் மற்றும் பன்மைத்துவ வரலாறு என பல காரணிகளை கண்டுக்கொள்ளவே இல்லை என்பது, இந்த அமைப்பின் நம்பகத்தன்மையையும் இந்தியாவின் மத சுதந்திரம் பற்றிய புரிதல் தொடர்பான கேள்விகளை எழுப்புவதாக இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | செங்கோலை அகற்ற வேண்டும்... சமாஜ்வாதி கட்சியின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர்..!
USCIRF மீண்டும் தன்னைப் பற்றிய புரிதலை உலகிற்கு தந்துவிட்டது என்றும், இந்தியாவை 'குறிப்பிட்ட அக்கறை கொண்ட நாடு' (CPC) என மீண்டும் ஒருமுறை குறிப்பிட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை சிறுமைப்படுத்தும் முயற்சியாக இதைப் பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
"USCIRF இன் நம்பகத்தன்மை மற்றும் குறிக்கோள்கள் பற்றி பல கேள்விகள் எழுகின்றன. USCIRF சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை விட மோதலை ஏற்படுத்துவதற்காக செயல்படுகிறதா என்ற கேள்விகள் எழுந்தால், இது தொடர்பான முழுமையான விசாரணை தேவைப்படுகிறது" என IMF கேட்டுக் கொண்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை, ஆப்கானிஸ்தான், கியூபா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுவதன் மூலம், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை தவறாக அணுகும் தனது தன்மையை அம்பலப்படுத்திவிட்டது USCIRF என ஐ.எம்.எஃப் கூறுகிறது.
"மாநிலங்களுக்கு சுயாட்சியை வழங்கும் இந்திய அரசியலமைப்பு, தன்னிச்சையாக சட்டங்களை இயற்றுவதற்கும் செயல்படுத்துவதற்கும் தனிப்பட்ட உள்ளாட்சிகளுக்கு சுதந்திரம் கொடுத்திருப்பதை சுட்டி காட்டிய ஐ.எம்.எஃப்,. ஜனநாயகமற்ற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட்டிருப்பது தவறு. யதார்த்தத்தில் இருந்து விலகுவதுடன், இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைத்தல், பிரச்சினை, மத சுதந்திரம் ஆகியவற்றை தவறாக சித்தரிக்க முயலும் முயற்சி இது என கண்டனங்களை பதிவு செய்துள்ளது.
மேலும் படிக்க | பணமழையில் நனைய வேண்டுமா? அன்னை லட்சுமி அருளுடன் செல்வந்தனாக வழிபாடு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ