வக்ர நிவர்த்தி அடையும் குரு... இந்த ராசிகளின் செல்வ மழை கொட்டும்

ஜோதிடத்தின் படி, தேவகுரு தற்போது மேஷ ராசியில் வக்ர கட்டத்தில் சஞ்சரித்துள்ளார். ஒரு கிரகம் பிற்போக்கு நிலையில் இருக்கும்போது, ​​அதன் சுப பலன்கள் சற்று குறையும். அதன்படி கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி, வியாழன் மேஷத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்தார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 22, 2023, 05:02 PM IST
  • நிலுவையில் இருந்த பணிகள் அனைத்து சுமுகமாக முடிப்பீர்கள்.
  • பணம் சம்பாதிப்பது மற்றும் சேமிப்பது மிகவும் எளிதாக இருக்கும்.
  • திருமண வாழ்வில் இனிமை இருக்கும்.
வக்ர நிவர்த்தி அடையும் குரு... இந்த ராசிகளின் செல்வ மழை கொட்டும் title=

குரு வக்ர நிவர்த்தி பலன்கள் 2023: ஜோதிட சாஸ்திரத்தில் வியாழனின் இடம் மிகவும் முக்கியமானது. குருவின் ராசி மாற்றம், வக்ர பெயர்ச்சி அல்லது வக்ர நிவர்த்தி அனைத்தும் மக்களின் வாழ்க்கையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துக் கூடும். ஏனெனில் குரு மகிழ்ச்சி, செல்வம், புகழ், திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட அனைத்து வகையான செல்வங்களுக்கும் அதிபதியாக கருதப்படுகிறார். அதேபோல் வியாழன் சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய மற்றும் கனமான கிரகமாகும்.

ஜோதிடக் கணக்கீடுகளின்படி, இந்த செப்டம்பர் மாதம் முதல் குரு பகவான் தற்போது மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்து சஞ்சரித்துள்ளார். ஒரு கிரகம் வக்ர நிலையில் இருக்கும்போது, ​​அதன் சுப பலன்கள் சற்று குறைவாகதான் இருக்கும். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி, வியாழன் மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்தார், தற்போது குரு பகவான் வியாழன் அன்றைய தினத்தில் இருந்து அடுத்த 118 நாட்களுக்கு இந்த ராசியில் வக்ர நிலையில் தான் பயணிப்பார். ஆனால், வரும் டிசம்பர் 23, 2023 அன்று, குரு தேவன் வியாழன் மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து நேராக பயணிக்க ஆரம்பிப்பார், ஜோதிட இது ஒரு பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | வெற்றிகள் குவியும்: சனி வக்ர நிவர்த்தியால் இந்த ராசிகள் வாழ்வில் உச்சம் தொடுவார்கள்

இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்:
ஜோதிட சாஸ்திரப்படி குரு வக்ர நிவர்த்தி சுப பலன்கள் அதிகரித்து அதன் பலன் 12 ராசிகளிலும் தெரியும். குரு தேவன் வியாழன் சுமார் நான்கு மாதங்கள் வக்ர நிலையில் இருந்து டிசம்பரில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், எனவே குரு வக்ர நிவர்த்தியாளல் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.

இந்த மூன்று ராசிகளுக்கு செல்வச் செழிப்பும், வளமும் பெருகும்

சிம்ம ராசி  (Leo Zodiac Sign): சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் அபரிமிதமான ஆசிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்து இந்த காலக்கட்டத்தில் முடிவடையும். எல்லா பிரச்சனைகளும் நீங்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வெளியூர் பயணம் செல்லலாம். திருமண வாழ்வில் இனிமை இருக்கும்.

தனுசு ராசி (Sagittarius Zodiac Sign): தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்ப விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் புதிய உறுப்பினர் வருகை ஏற்படலாம். வியாபாரத்தில் உயர்வு கூடும். குரு வக்ர நிவர்த்தியானதற்கு பிறகு, பணம் சம்பாதிப்பது மற்றும் சேமிப்பது உங்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும்.

மகர ராசி (Capricorn Zodiac Sign): மகர ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். இலக்குகள் நிறைவேறும், புதிய சொத்துக்கள் வாங்கலாம். குரு பகவான் வியாழன் வக்ர நிவர்த்தி அடைந்து நேரிடையாக பயணிக்க ஆரம்பிக்கும் போது முன்னோர்களின் செல்வத்தால் ஆதாயம் பெறுவீர்கள். நிலுவையில் இருந்த பணிகள் அனைத்து இந்த நேரத்தில் சுமுகமாக முடிவடையும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. நீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தீபாவளிக்கு முன் சனி வக்ர நிவர்த்தி.. இந்த ராசிகளுக்கு குபேர யோகம், சொர்க்க வாழ்க்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News