அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் ரவியோகம்... பலன் பெறும் ‘5’ ராசிகள்!

ஆகஸ்ட் 22 ஆம் தேதி  மிகவும் மங்களகரமான ரவியோகம் உருவாகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் 5 ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மிகவும் பலன் தரும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 23, 2023, 05:49 AM IST
அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் ரவியோகம்... பலன் பெறும் ‘5’ ராசிகள்! title=

ஆகஸ்ட் 22 ஆம் தேதி மிகவும் மங்களகரமான ரவி யோகம் உருவாகிறது. இதனுடன் இன்று சந்திரன் சுப நிலையில் இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பகவான் அனுமனின் அருளால் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம்  கொட்ட போகிறது  என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறுவதை என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி

ரவி யோகம் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அரசியலுடன் தொடர்புடைய இந்த ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறலாம். வேலை செய்பவர்களுக்கும் இந்த நாள் மிகவும் சிறப்பாக இருக்கும். இன்று அவருக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இன்று மாலையில் சுப காரியங்களில் ஈடுபடலாம். ஒட்டுமொத்தமாக, இன்று உங்கள் தொழிலுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும்.

ரிஷபம் ராசி

ரவி யோகம் காரணமாக ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் மிகவும் சிறப்பான யோகமாக இருக்கும். இன்று கிடைக்காமல் மாட்டிக் கொண்டிருக்கும் பணத்தை திரும்பப் பெற வாய்ப்பு உள்ளது. நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், இன்று நீங்கள் அதை திரும்பப் பெறலாம். இதனுடன், இன்று உங்கள் பழைய கடனையும் அடைத்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். 
உங்கள் முயற்சிகள் பலனளிக்கும்.

கடக ராசி

ரவி யோகம் காரணமாக கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சிறப்பான ஒரு மாற்றம் காணப்படும். அவர் கற்பனை கூட செய்திருக்க முடியாத விஷயங்கள் நடக்கும். இன்று உங்கள் நிதி நிலையும் நன்றாக இருக்கும். நீங்கள் யாரிடமாவது கடன் வாங்க நினைத்தால், இன்று நீங்கள் அந்த முயற்சியில் வெற்றி பெறலாம். வீட்டை விட்டு வெகு தொலைவில் வசிப்பவர்கள் இன்று தங்கள் பெற்றோர் மற்றும் மனைவியை சந்திக்கலாம்.

மேலும் படிக்க | ஜாக்பாட் வாழ்க்கை, பண வரவு: சனி வக்ர நிவர்த்தியால் இந்த ராசிகளுக்கு பம்பர் லாபம்

துலாம் ராசி

ரவி யோகம் காரணமாக துலாம் ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறப் போகிறார்கள். உங்கள் வேலைகள் அனைத்தும் நிறைவேறும். இத்துடன் குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் ஏற்படும். சட்ட விவகாரம் உள்ளவர்கள் இன்று அதில் வெற்றி பெறலாம். உங்கள் மனைவியுடன் மிகவும் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்

விருச்சிக ராசி

ரவி யோகம் காரணமாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிதி, சொத்து சம்பந்தமான விஷயங்களில் மிகச் சிறந்த நாளாக இருக்கும்.  உங்கள் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.  தொழில், வியாபாரம் தொடர்பான பல்வேறு அனுபவங்களைப் பெறுவீர்கள். உங்கள் பெற்றோரை ஆன்மீக தரிசனத்திற்கு அழைத்துச் செல்லலாம். அதே சமயம் மாணவர்கள் போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது

மேலும் படிக்க | குருவோட கைகோர்த்த குபேரன்.. செல்வ மழையில் நனைய போகும் ராசிகள் இவையே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News