2023 ஜனவரியில் புதன் அஸ்தமனம்: ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் புதன் கிரகம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அவர் புத்திசாலித்தனத்தின் காரணியாகக் கருதப்படுகிறார். ஜாதகத்தில் புதனின் நிலை சிறப்பாக இருந்தால், அவர் வாழ்க்கையில் சிறந்த முடிவுகளை எடுத்து சரியான வேலைகளைச் செய்வார். புதன் கிரகம் வலுவாக இருந்தால், அவர் தனது செயல்களால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். புதன் தற்போது தனுசு ராசியில் அமர்ந்து வரும் நிலையில் ஜனவரி 2ம் தேதி இந்த ராசியில் அஸ்தமனம் ஆக உள்ளார். அதன் எதிர்மறை பலன் பல ராசிக்காரர்களுக்கு இருக்கும். ஜோதிட சாஸ்திரப்படி ஜாதகத்தில் புதன் அசுப நிலையில் இருந்தால், அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அப்படிப்பட்ட நிலையில் புதன் அஸ்தமனமாவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
கன்னி
இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் நான்காவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகிறார். இத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். உடல் நிலை மோசமடையலாம். அதே நேரத்தில், அலுவக வேலையில் இருப்பவர்களும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
சிம்மம்
புதன் கிரகம் அஸ்தமனம் ஆவதால் தனுசு ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் வரலாம். பண இழப்பு காரணமாக, நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். உடல்நிலையில் கவனமாக இருக்கவும், ஆரோக்கியம் மோசமடைய வாய்ப்பு உள்ளது. பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்களும் சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதலீடு செய்வதற்கு முன் கவனமாக சிந்தியுங்கள்.
மேலும் படிக்க | மீனத்தில் மாளவ்ய ராஜயோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு அமர்க்களமான புத்தாண்டு!
துலாம்
ஜோதிட சாஸ்திரப்படி, துலாம் ராசிக்காரர்களின் ஜாதகத்தில் புதன் மூன்றாவது வீட்டில் அஸ்தமனம் ஆகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக நடக்க வேண்டும். குறிப்பாக எழுத்துத் துறையுடன் தொடர்புடையவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Astro: சனி பகவானின் மனம் குளிர செய்ய வேண்டியவை!