புதன் சஞ்சாரத்தால் உருவாகும் பத்ர ராஜயோகத்தால் குதூகலிக்கப் போகும் 3 ராசிகள்

Bhadra Rajyoga: ஐந்து மங்களகரமான ராஜயோகங்களில் ஒன்றான பத்ர ராஜயோகம் இன்னும் ஒரு வாரத்தில் புதனின் ராசி மாற்றத்தால் உருவாகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 17, 2023, 07:38 PM IST
  • பத்ர ராஜயோகம் சுபமான யோகமா?
  • புதனின் ராசி மாற்றத்தால் உருவாகும் யோகம்
  • ஐந்து மங்களகரமான ராஜயோகங்களில் ஒன்று பத்ர ராஜயோகம்
புதன் சஞ்சாரத்தால் உருவாகும் பத்ர ராஜயோகத்தால் குதூகலிக்கப் போகும் 3 ராசிகள் title=

கிரகங்களின் இளவரசனான புதன், ஜூன் 24ஆம் தேதி தனது ராசியை மாற்றுகிறா, மிதுனத்தில் சஞ்சாரம் செய்யும் புதன், மூன்று ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக செயல்படுவார். அதிலும், அவரின் இட மாற்றத்தால் பத்ர ராஜயோகம் என்றா சுபயோகம் உருவாகிறது. இந்த யோகம், செல்வ வளத்தையும், வெற்றிக்கான வாய்ப்புகளை வழங்குகிரது.  

ஜோதிடத்தில் பத்ர ராஜயோகம்
பஞ்சமஹாபுருஷ யோகங்களில் ஒன்றான பத்ர யோகம் என்பது, புதன் குறிப்பிட்ட வீடுகளிலும் ராசிகளிலும் அமைவதால் உண்டாகும். ஐந்து மங்களகரமான ராஜயோகங்களில் ஒன்றான பத்ர ராஜயோகம் மங்கலங்களை அளிக்கும்.

புதன் கிரகமானது, அறிவு, சுறுசுறுப்பான மனம், தர்க்கரீதியான பகுத்தறிவு, அனிச்சை செயல்கள், ஆரோக்கியம், வணிகம், இளமை மற்றும் ஈர்க்கும் ஆளுமை ஆகியவற்றிற்கு அதிபதியான கிரகம் ஆகும்.

பத்ர ராஜயோகம் எப்போது உருவாகும்?

புதன் கிரகம் கன்னி அல்லது மிதுனம் மற்றும் லக்னத்தில் இருந்து முதல், நான்காவது, ஏழாவது அல்லது பத்தாம் வீட்டில் இருக்கும் கேந்திர வீடுகளில் ஒன்றில் அமைந்திருக்கும் போது பத்ர ராஜயோகம் உருவாகிறது.

பத்ர ராஜயோகத்தின் பலன்கள்

வணிகத்தில் வெற்றி, சிறந்த பேச்சாற்றல், புகழ், இளமையான தோற்றம் என புதனின் நற்பலன்கள் எல்லாம் கிடைக்கும். ஜூன் 24ம் தேதியன்று உருவாகும் பத்ர ராஜயோகத்தால் குதூகலிக்கப் போகும் 3 ராசிகள் இவை.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு தான் ரொம்ப கஷ்டம்... நிவாரணம் பெறுவது எப்படி?

பத்ர ராஜயோகம் 2023: மூன்று ராசிக்காரர்களுக்கு நன்மை
மிதுனம்

புதன் கிரகம் மிதுன ராசிக்காரர்களின் லக்ன வீட்டில் சஞ்சரிக்கப் போவதால், பத்ர ராஜயோகம் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். இந்த நேரத்தில், வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைப்பதுடன் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் இருக்கும்! கூட்டு வியாபாரத்தில் இருப்பவர்களும் பொருளாதார ரீதியாக ஆதாயம் அடைவார்கள். இதன் காரணமாக, உங்கள் ஆளுமையும் ஊட்டமளிக்கும் மற்றும் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

புதன் கிரகம் உங்கள் நான்காம் வீட்டிற்கு அதிபதியாக இருப்பதால், இந்த காலகட்டத்தில் சொத்து அல்லது புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகத்தில் அதிக மரியாதை மற்றும் புகழைக் கொடுக்கும் உயர் பதவி கிடைக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.  

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு அட்டகாசமான நன்மைகள், அமோகமான வாழ்க்கை

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும் பத்ர யோகம், சமூகத்தில் பிரபலம் அடையவும் நற்பெயரையும் பெற உதவும். இந்தக் காலகட்டத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவும். எதிர்பாராத பண வெகுமதிகளையும், வாராக்கடன்கலையும் திரும்பப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு பணி உயர்வு மற்றும் வெகுமதி கிடைக்கும்.

தனுசு
மிதுனத்தில் புதன் சஞ்சரிப்பதால் உருவாகும் பத்ர ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். பிரச்சினைகள் அனைத்தையும் முடித்து வைக்க உதவும் இந்த பத்ர ராஜயோகம், பயணத்தையும் அதிகரிப்பார். பயணங்கள் சாதகமாகவும், மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம், விளையாட்டுகளில் பந்தயம் கட்டலாம். எதிர்பாரா விதங்களில் இருந்து பணம் வந்து சேரும் அதிர்ஷ்டமும் உண்டு. சட்ட விவகாரங்கள் அல்லது தகராறுகள் அனைத்தும் தீரும் காலம் இது.

தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபார வளர்ச்சிக்கான நேரம் இது. வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும். காதலர்களுக்கும் திருமணம் கைகூடும்.    

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு சண்டாள ராஜயோகம்: அக்டோபர் 30 வரை இந்த 3 ராசிக்காரர்களுக்கு சிக்கல் - நஷ்டம் சூழும்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News