தீபாவளிக்கு பிறகு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

புதன் பெயர்ச்சி காரணமாக தீபாவளிக்கு பிறகு இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 23, 2022, 06:02 AM IST
  • தீபாவளிக்குப் பிறகு புதன் பெயர்ச்சி
  • கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
தீபாவளிக்கு பிறகு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் title=

புதன் பெயர்ச்சி அக்டோபர் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. கன்னி ராசியில் ஆட்சியில் உச்சம் பெற்றிருந்த புதன், அக்டோபர் 26க்குப் பிறகு துலாம் ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். ஏற்கனவே சூரியனும், சுக்கிரனும் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், புதனும் துலாம் ராசிக்கு செல்வது விநோதமாக பார்க்கப்படுகிறது. இந்த கிரக கூட்டணி சில ராசிகளுக்கு அணுகூலமாக இருக்கும் அதேவேளையில், சில ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

​ரிஷபம் 

புதன் துலாம் ராசிக்கு செல்லும் அதேவேளையில், ரிஷப ராசிக்கு 6ஆம் வீடான நோய் மற்றும் எதிரி ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறது. இது பொருளாதார நிலையை சற்று கடினமாக்கி, செலவுகளை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. தோல், தொண்டை பிரச்சனைகள் வரலாம். எதிரிகள் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்கவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் 12 ஆம் வீட்டிற்கு செல்லும் புதன் பகவான், நிதி சார்ந்த விஷயங்களில் சாதகமற்ற சூழலை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது. செலவுகள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணபரிவர்த்தனையில் கவனமாக இருக்கவும். 

மேலும் படிக்க | Astro: 19 வருடங்கள் நீடிக்கும் சனி மகா திசை; சனியின் அருளைப் பெற செய்ய வேண்டியவை!

​கும்பம்

அதிகம் உழைக்க வேண்டிய நிலை உங்களுக்கு வரலாம். கடினமாக உழைத்தாலும் திருப்தி கிடைக்காத நிலையே இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் செலவுகளும் மிக அதிகமாக இருக்கும். இது உங்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கலாம். உடன்பிறப்புகளுடனான உறவும் பாதிக்கப்படலாம். எந்த விஷயத்திலும் வாக்குவாதம் வேண்டாம்.

​மீனம்

மீன ராசியினர் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்கவும். கண்கள் தொடர்பான சில பிரச்சனைகள் வரலாம். அலர்ஜி தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் என்பதால், தற்போதைக்கு அதிக தூசி நிறைந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். 

மேலும் படிக்க | கன்னியில் உருவாகும் திரிகிரஹி யோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு அமோக பலன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News