ஜூலை 2ம் தேதிக்குள் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்

Budh, Shani Effect on Zodiac Signs: ஜோதிடத்தில் புதனுக்கும் சனிக்கும் முக்கிய இடம் உண்டு. இந்த இரண்டு கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 15, 2022, 11:45 AM IST
  • சனி மற்றும் புதனின் சஞ்சாரம் யாருக்கு அனுகூலமாக இருக்கும்.
  • சனி, புதன் கிரகங்களின் நிலை மாற்றம் மிக நல்ல பலன்களை அளிக்கும்.
  • தடைபட்ட வேலைகள் தற்போது நடந்து முடியும்.
ஜூலை 2ம் தேதிக்குள் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் title=

ஜூன் மாதத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய் உள்ளிட்ட பல கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுகின்றனர். இதனுடன், கிரகங்களின் இளவரசர் புதன் வக்ர நிலையில் உள்ளது. பொதுவாக செல்வம், புத்திசாலித்தனம் மற்றும் வணிகம் போன்றவற்றின் காரணியாக புதன் கருதப்படுகிறது. புதன் கிரகம் தவிர, சனி பக்கவானும் கும்ப ராசியில் வக்ரமானார். சனி மற்றும் புதனின் சஞ்சாரம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அடுத்த 1 மாதம் புதன் இந்த நிலையில் இருப்பார். அக்டோபர் மாதம் வரை சனி பிற்போக்கு நிலையில் இருப்பார். இப்படிப்பட்ட நிலையில் இந்த இரண்டு கிரகங்களின் மாறியுள்ள நிலையால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.

இந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமான சூழல் உண்டாகும்

மேலும் படிக்க | 2 நாட்களில் 2 முக்கிய கிரகங்கள் பெயர்ச்சி, 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை

மேஷம் - புதன் மற்றும் சனியின் பிற்போக்கு நிலை மேஷ ராசியினருக்கு நன்மை பயக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரத்தில் புதிய முதலீடுகள் செய்வது நன்மை தரும். வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் தற்போது உள்ளது. புதிய விஷயங்களைத் தொடங்க இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். வியாபாரத்திலும் பல புதிய முயற்சிகளை தற்போது எடுக்கலாம். 

ரிஷபம்- ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனி, புதன் ஆகிய இருவரின் நிலையும் சுபமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம். வருமானம் உயர வாய்ப்பு உள்ளது. ஒரு குறிப்பிட்ட நபரின் வழிகாட்டுதலால் வர்த்தகர்கள் லாபம் பெறலாம். உங்கள் பேச்சில் பொறுமையை கடைபிடிக்கவும்.போதுமான பணம் கையில் இருக்கும். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீண்ட நாட்களாக ஒரு இடத்தில் சிக்கி இருந்த பணம் கிடைக்கும். கூட்டுப் பணிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பணத்தை சேமிப்பதில் வெற்றி கிடைக்கும்.

மிதுனம்- சனி மற்றும் புதன் தலைகீழாகச் செல்வது மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். இந்த காலகட்டத்தில் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். உத்தியோகத்தில் மாற்றத்துடன் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். புதிய வாகனம் அல்லது கட்டிடம் வாங்க எதிர்பார்க்கலாம். கல்வித் துறையில் வெற்றி பெறுவீர்கள்.

தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். லட்சுமி தேவியின் அருளைப் பெறுவீர்கள். தடைபட்ட வேலைகள் நிறைவேறும். கல்வி, வேலை வாய்ப்புகளில் புதிய வாய்ப்புகள் அமையும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | வார ராசிபலன் (2022 ஜூன் 6 முதல் ஜூன் 12): தனுசு முதல் மீனம் வரை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

 

Trending News