சனியின் ராசியில் சூரியன்; 3 ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை காலம்

Shani Surya Yuti 2023: ஜோதிடத்தில் சனி மற்றும் சூரியனின் சேர்க்கை மிகவும் ஆபத்தானது.  அதன்படி பிப்ரவரி 2023 இல் சனி-சூரியன் இணைவது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் வேதனையாகவும் தீங்கு விளைவிப்பதாகவும் இருக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 12, 2023, 02:19 PM IST
  • சூரியனின் ராசியில் ஏற்படும் மாற்றம்.
  • சூரியன் சனியின் ராசியான மகரத்தில் பெயர்ச்சியாக உள்ளார்.
  • மகர ராசியில் சூரியனும் சனியும் இணைவு.
சனியின் ராசியில் சூரியன்; 3 ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை காலம் title=

சூர்யப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி 2023 ராசி பலன்கள்: ஜோதிட சாஸ்திரத்தின்படி, சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றி, இரண்டரை ஆண்டுகளில் சனியின் ராசியில் தோன்றுவார். அதன்படி 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் இடப் பெயர்ச்சியாகப் போகிறார். இந்த சனிப் பெயர்ச்சி நிகழ்வு ஜனவரி 17, 2023 அன்று அரங்கேறும். அதேசமயம், பிப்ரவரி 13, 2023 அன்று சூரியன் பெயர்ச்சியாகி கும்ப ராசிக்குள் பெயர்ச்சி அடைவார். பிறகு மார்ச் 14, 2023 வரை சூரியன் கும்ப ராசியில் இருப்பார். இப்படி ஒரு மாதம் கும்ப ராசியில் சூரியனும் சனியும் இணைவதால் 3 ராசிக்காரர்களுக்கு அசுபமும், பல பாதிப்புகளும் உண்டாகும். அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை இந்த பதிவில் காணபோம்.

இந்த ராசிக்காரர்களுக்கு சனி - சூரியன் சேர்க்கை அசுபமான பலனைத் தரும்

கடக ராசி: சூரியன் மற்றும் சனியின் சேர்க்கையால், கடக ராசிக்காரர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும். வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரலாம், கட்டுப்பாடற்ற பேச்சு பெரும் தீங்கு விளைவிக்கும். நெருக்கமானவர்களிடம் மிகவும் சிந்தனையுடன் பேசுங்கள். குறிப்பாக கோபப்படவோ தகராறு செயலை செய்யவோ கூடாது. இல்லையெனில் உறவில் விரிசல்கள் ஏற்படும். இந்த ஒரு மாதத்தை பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் கையாளுங்கள்.

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று பண மழையில் நனையபோகும் ராசிகள்! 

விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்காரர்களுக்கு  சூரியப் மற்றும் சனி சேர்க்கை பண இழப்பை தரும். இந்த ராசிக்காரர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம். குறிப்பாக தொழிலதிபர்கள் இந்த நேரத்தில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் அல்லது புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வேண்டும். இது தவிர உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

கும்ப ராசி: சூரியன் - சனி சேர்க்கை கும்ப ராசியில் தான் நடக்கிறது. இதனால் பகை கிரகங்களான சூரியனும், சனியும் கும்ப ராசியில் நுழைவது தீங்கு விளைவிக்கும். இந்த ராசிக்காரர்கள் பல சமயங்களில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடலாம். பணம், உறவுகள், ஆரோக்கியம் என அனைத்திலும் கவனம் செலுத்துங்கள். கொஞ்சம் சிந்தனையுடன் செயல்படுங்கள். முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். கோபத்தைக் கட்டுப்படுத்தவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உங்க கணவன்/மனைவி ‘இந்த’ ராசியா! அப்ப உங்களை மாதிரி லக்கி யாருமே இல்லை! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News