எப்போதும் சுகபோகம், பணக்கார யோகம்... இவர்கள்தான் குபேரருக்கு மிகவும் பிடித்த ராசிகள்!!

Lucky Zodiac Signs:ஜோதிட ரீதியாக, சில ராசிக்காரர்கள் மீது சதா சர்வ காலமும் குபேரர் மற்றும் லட்சுமி அன்னையின் அருள் இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 10, 2023, 01:22 PM IST
  • குபேரர் துலாம் ராசிக்காரர்கள் மீது எப்போதும் சிறப்பு அருள் பொழிகிறார்.
  • இவருடைய அருளால் இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி அடைகிறார்கள்.
  • குபேரனின் அருளால் இவர்கள் மீது எப்போதும் பணமழை பொழிகிறது.
எப்போதும் சுகபோகம், பணக்கார யோகம்... இவர்கள்தான் குபேரருக்கு மிகவும் பிடித்த ராசிகள்!! title=

குபேரருக்கு பிடித்தமான ராசிகள்: இந்து சாஸ்திரப்படி அன்னை லட்சுமி செல்வத்தின் அன்னையாக கருதப்படுகிறார். அதுபோலவே குபேரரும் செல்வத்தின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். அன்னை லட்சுமியுடன் குபேரரையும் சேர்ந்து வணங்குபவர்களின் வாழ்க்கையில் எப்போதும் பணத்திற்கும், செல்வச் செழிப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது என்பது ஐதீகம். குபேரரின் ஆசீர்வாதம் பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும் பணப் பற்றாக்குறையை சந்திக்க மாட்டார்கள் என்பது நம்பிக்கை. பலர் தங்கள் வீடுகளில் குபேரரின் சிலையை வைத்து வழிபாடு செய்வது வழக்கம். 

குபேரர் நமக்கு செல்வங்களை அள்ளித்தருவது மட்டுமல்லாமல், அந்த செல்வத்தை வைத்து பல நல்ல செயல்கல்களை செய்வதற்கான பண்பையும் அளிக்கிறார். அனைத்தையும் தனக்கு தனக்கு என வைத்துக்கொள்ளாமல் இல்லாதவர்களுக்கு கொடுத்து, சமூக பணிகளிலும், அறம் வளர்க்கும் பணிகளிலும் நாம் செல்வத்தை பயன்படுத்தினால், குபேரர் நமக்கு இன்னும் அதிக செல்வத்தை வாரி வழங்குவார். 

குபேரர் தன்னை வணங்குபவர்களுக்கு பணப் பற்றாக்குறை, ஏழ்மை, வருத்தம், நிதி நெருக்கடி, ஆகிய பிரச்சனைகள் வராமல் பார்த்துக்கொள்வார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, உலகில் தோன்றும் மக்கள் அனைவரும் 12 ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் வெவ்வேறு சிறப்புகள் இருக்கும். குபேரர் அனைத்து ராசிக்காரர்களுக்கும் பாரபட்சமின்றி தன் அருளை அளிக்கிறார். 

எனினும், ஜோதிட ரீதியாக, சில ராசிக்காரர்கள் மீது சதா சர்வ காலமும் குபேரர் மற்றும் லட்சுமி அன்னையின் அருள் இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

கடக ராசி

கடக ராசிக்காரர்கள் மீது குபேரரின் அருள் நிலைத்திருக்கும். குபேரர் அவர்கள் மீது தனது ஆசிகளை எப்போதும் பொழிகிறார். இவர்கள் எந்த வேலையில் கை வைத்தாலும் கண்டிப்பாக வெற்றி அடைகிறார்கள். அவர்களின் வெற்றிக்கு யாரும் தடையாக இருக்க முடியாது. வியாபாரம் செய்யும் போது, ​​அவர்கள் அதை உயரத்திற்கு கொண்டு செல்கிறார்கள். அதிர்ஷ்டம் எப்போதும் இந்த நபர்களுக்கு சாதகமாக இருக்கு. மேலும் கடக ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பணத்திற்கு எந்தப் பற்றாக்குறையும் இருக்காது. தங்கள் கடின உழைப்பின் பலத்தால் அனைத்து துறையிலும் வெற்றி பெறுவார்கள். கடக ராசிக்காரர்களின் பொருளாதார நிலை எப்போதும் மிகவும் வலுவாக இருக்கும்.

மேலும் படிக்க | 50 ஆண்டுக்கு பிறகு அபூர்வ நிகழ்வு.. இந்த ராசிக்காரர்களுக்கு குபேர வாழ்க்கை

விருச்சிக ராசி

குபேரர் எப்போதும் விருச்சிக ராசிக்காரர்களிடம் அன்பாக இருப்பார். இவருடைய அருளால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்தும், கௌரவமும் கிடைப்பதோடு, மரியாதையும் கூடும். இவர்கள் வீட்டில் எப்போதும் பணத்தின் வருகை இருந்து கொண்டே இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு எப்போதும் லட்சுமி அன்னை மற்றும் குபேரரின் அருள் கிடைக்கும். வேலை-வியாபாரத்தில் வெற்றியின் உச்சத்தை தொடுவார்கள்

துலா ராசி

குபேரர் துலாம் ராசிக்காரர்கள் மீது எப்போதும் சிறப்பு அருள் பொழிகிறார். இவருடைய அருளால் இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி அடைகிறார்கள். குபேரனின் அருளால் இவர்கள் மீது எப்போதும் பணமழை பொழிகிறது. துலா ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் எப்போதும் பணத்துக்கோ நிம்மதிக்கோ குறைவு இருப்பதில்லை. இவர்களுக்கு வீடு, சொத்துக்கள் பெருகும், அதிர்ஷ்டம் கிடைக்கும். இவர்கள் எந்த வித பெரிய பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டிய நிலை எப்போதும் ஏற்படாது. குபேரர் மற்றும் அன்னை லட்சுமியின் அருளால் இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வெற்றிகளை தேடி தருவார் குரு.. ராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News