இன்றைய ராசிபலன் 15 மே 2024: இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கப்போவது யார்?

2024 May 15 Daily Horoscope: மே மாதம் 15ம் நாள் புதன்கிழமை ராசிபலன்... இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கப்போவது எந்த ராசிக்காரர்கள்? தெரிந்துக் கொள்வோம்... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 15, 2024, 06:02 AM IST
  • மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள்
  • இன்றைய ராசிபலன் மே 15, 2024க்கான ஜோதிட கணிப்பு
  • வைகாசி மாதம் இரண்டாம் நாளுக்கான ராசிபலன்
இன்றைய ராசிபலன் 15 மே 2024: இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கப்போவது யார்? title=

May 15 Rasipalan:  குரோதி ஆண்டு, வைகாசி மாதம் இரண்டாம் நாள், ஆயில்யம் நட்சத்திர நாளான இன்று யார் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள்? யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? தெரிந்துக் கொள்வோம்

15-05-2024 குரோதி, வைகாசி 2, ராசி பலன்கள்

மேஷம் 
அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.  

ரிஷபம் 
உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செய்யும் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். சமூகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். பொழுதுபோக்கு செயல்களால் ஆதாயம் அடைவீர்கள்.  

மிதுனம் 
குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தனவருவாயில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உத்தியோகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். விவசாயப் பணிகளில் ஆதாயம் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். 

கடகம் 
கடக ராசிக்காரர்கள் இன்று விமர்சனப் பேச்சுக்களை கேட்க வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்களை குறை சொல்வதை தவிர்க்கவும். கருத்துகளை தெளிவாக வெளிப்படுத்தவும். மனம் விட்டு பேசுவதன் மூலம் ஒற்றுமை மேம்படும். புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும். சக ஊழியர்களால் அலைச்சல்கள் உண்டாகும். 

மேலும் படிக்க | சனியால் அதிர்ஷ்ட பலன், இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்

சிம்மம்
வெளியூர் தொடர்பான பயணங்கள் ஈடேறும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான செலவுகள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். விடாப்படியான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும்.  

கன்னி 
திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும் நாள் இது கன்னி ராசிக்காரரே... எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும், முதலீடுகளும் அதிகரிக்கும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். உறவுகளிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவான வாய்ப்புகள் உண்டாகும். புதுவிதமான சிந்தனைகளை செயல்வடிவில் மாற்றுவீர்கள். சேமிப்பு தொடர்பான முயற்சிகள் கைகூடும். 

துலாம்
எதிர்பாராத சில திடீர் பயணங்கள் கைகூடும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உண்டாக்கும். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். மருத்துவத் துறையில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.  

விருச்சிகம் 
மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் திட்டமிட்டுச் செயல்படவும். வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிப்படையான பேச்சுக்களால் நெருக்கடிகள் ஏற்படும். 

மேலும் படிக்க | ஜுன் 1 செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பன வரவு, லாபம்... வாழ்வில் கொடிகட்டி பறப்பார்கள்

தனுசு
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வியாபார ரீதியான முயற்சிகளில் விவேகம் வேண்டும். கல்வி கற்கும் திறனில் மாற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக் கொடுத்துச் செல்லவும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். வர்த்தகப் பணிகளில் முதலீடுகளை குறைத்துக் கொள்ளவும்.  

மகரம் 
நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வர்த்தகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.  

கும்பம் 
செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். எதிர்பாராத வரவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். குழந்தைகளிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். உறவினர்களின் வழியில் புரிதல் உண்டாகும். வாடிக்கையாளர்களிடத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும்.  

மீனம்
துணைவர் வழியில் சில உதவிகள் கிடைக்கும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். புதுவிதமான ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். நண்பர்களின் வழியில் புரிதல் அதிகரிக்கும். பணி நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை அறிந்து கொள்வீர்கள். கீர்த்தி நிறைந்த நாள்.

மேலும் படிக்க | Astro: கடன் தொல்லை தீர, வருமானம் பெருக... எளிய ‘செம்பருத்தி பூ’ பரிகாரங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News