11:15 PM - 31 - Jan - 2019
இந்தியாவிற்கு எதிரான 4 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி...
நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 92 ரன்னில் சுருண்டது.....
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் முடிந்துள்ளது. அதில் கடந்த 23 ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி நேப்பியர் மெக்லீன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. கடந்த 26 ஆம் தேதி இரண்டாது ஒருநாள் போட்டி மவுண்ட் மன்கன்யில் மைதானத்தில் நடைபெற்றது. அதில் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. கடந்த 28 ஆம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டி அதே மவுண்ட் மன்கன்யில் மைதானத்தில் நடைபெற்றது. அதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றதால் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்திய அணி.
இந்தநிலையில், இன்று இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டி ஹாமில்டன் செடான் பார்க்கில் நடை பெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கினர். தனது 200வது போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா 7 ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட்டை இழக்க ஷுப்மன் கில் தனது முதல் போட்டியில் விளையாடினார். அதன் பின் ஒவ்வொருவராக விக்கெட்டை இழந்தனர்.
கடைசியில் இந்திய அணி 30.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 92 ரன்கள் எடுத்தது. விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனி இல்லாமல் இன்று நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணி 92 ரன்களில் ஆல்அவுட் ஆனது. ஹாமில்டனில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து பவுலர் டிரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
That's that from the India innings. #TeamIndia all out for 92. Trent Boult picks up his 5th five-wkt haul #NZvIND pic.twitter.com/E1496UeggU
— BCCI (@BCCI) January 31, 2019