விளையாட்டு: தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் ஏ.பி. ஏபி டிவில்லியர்ஸ் இன்று [புதன்கிழமை], தேசிய அணியை வழிநடத்த வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியதாக வெளியான செய்திகள் உண்மை இல்லை என மறுத்துவிட்டார்.
இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பகக்த்தில் அவர், "SA கிரிக்கெட் அணியை வழிநடத்த என்னிடம் கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டதாக வெளியாகும் செய்திகள் என்பது உண்மையல்ல. இந்த நாட்களில் எதை நம்புவது என்று தெரிந்து கொள்வது கடினம்" என்று டிவில்லியர்ஸ் ட்வீட் செய்துள்ளார்.
Reports suggesting Cricket SA have asked me to lead the Proteas are just not true. It's hard to know what to believe these days. Crazy times. Stay safe everyone.
— AB de Villiers (@ABdeVilliers17) April 29, 2020
2018 ஆம் ஆண்டில் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் அவர் ஓய்வு பெற்றார். ஆனால் அவர் தேசிய அணியில் மீண்டும் திரும்புவது பற்றிய பேச்சு எழுந்துள்ளது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியான கிரிக்கெட் கனெக்ட் [Cricket Connected], நிகழ்சியில் "தென்னாப்பிரிக்கா அணியை மீண்டும் வழிநடத்துமாறு கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டதா? எனக் கேள்வி எழுப்பட்டது.
"எனக்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நான் சிறந்த வடிவத்தில் இருக்க வேண்டும். அடுத்த வீரரை விட நான் சிறப்பாக இருக்க வேண்டும். நான் என் இடத்திற்கு தகுதியானவன் என்று நான் உணர்ந்தால், நான் விளையாடும் லெவன் அணியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது எனக்கு மிகவும் எளிதா இருக்கும்" என்று அவர் கூறினார்.
"நான் சிறிது காலமாக அணியின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. நானும் மற்ற வீரர்களுடன் சேர்ந்து அங்கு இருப்பதற்கு தகுதியானவன் என்பதைக் காண்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறினார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி 20 உலகக் கோப்பைக்கான தேசிய அணியில் டிவில்லியர்ஸ் பரிசீலிக்கப்படுவார் என்று தென்னாப்பிரிக்காவின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் முன்பு கூறியிருந்தார், அவர் நல்ல வடிவத்தைக் காட்டி, தன்னை “வேலைக்கு சிறந்த மனிதர்” என்று நிரூபித்தால் மட்டுமே எனவும் கூறினார்.
ஆனால் கோவிட் -19 தொற்றுநோயை அடுத்து, அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் டி 20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் வருவது உறுதி இல்லை என்று டிவில்லியர்ஸ் கூறினார்.
36 வயதான அவர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் தேசிய அணிக்காக 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி 20 போட்டிகளில் விளையாடினார்.