பாகிஸ்தானில் பல வீரர்கள் விராட்டை விட சிறந்தவராக வரக்கூடியவர்கள்: அப்துல் ரசாக்

"கோஹ்லி அதிர்ஷ்டசாலி" பாகிஸ்தானில் விராட் கோஹ்லியை விட சிறந்த பல வீரர்கள் உள்ளனர் என்று பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் கூறினார்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Jan 23, 2020, 07:08 AM IST
பாகிஸ்தானில் பல வீரர்கள் விராட்டை விட சிறந்தவராக வரக்கூடியவர்கள்: அப்துல் ரசாக்
File photo

புது டெல்லி: பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் இந்திய கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் குறித்து மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். ஹார்திக் பாண்ட்யா ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக மாற தான் உதவுவதாக அவர் முன்பு பேசியிருந்தார். அதுமட்டுமில்லாமல் மேலும் ஜஸ்பிரீத் பும்ராவை "குழந்தை பந்து வீச்சாளர்" என்றும் அழைத்தார். அவரது கருத்துக்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கோபப்படுத்தின. தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து ரசாக் கருத்தை தெரிவித்துள்ளார். பி.சி.சி.ஐ அவரை முழுமையாக ஆதரித்தது "கோஹ்லி அதிர்ஷ்டசாலி" என்று ரசாக் கூறினார். பாகிஸ்தானில் கோஹ்லியை விட சிறந்த பல வீரர்கள் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

அப்துல் ரஸ்ஸாக் அளித்த ஒரு பேட்டியில், கோஹ்லியை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்று வர்ணித்தார். அதே நேரத்தில், அவருக்கு பிசிசிஐ அமைப்பின் ஆதரவும் இருப்பதாகக் கூறினார்.

ரஸாக் கூறுகையில், "அவர் (விராட் கோலி) ஒரு சிறந்த வீரர், அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே சமயம், பி.சி.சி.ஐ அவரை முழுமையாக ஆதரிக்கிறது மற்றும் அவர் மீது நம்பிக்கை வைத்திருப்பது, அவர் அதிர்ஷ்டசாலி. ஒரு வீரரின் வெற்றிக்கு இந்த விஷயங்கள் மிகவும் முக்கியம். பி.சி.சி.ஐ-யின் ஆதரவு அவர்களுக்கு இருப்பதால், அவர்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டப்படுகிறார்கள். இதன் விளைவு அனைவருக்கும் முன்னால் இன்று இருக்கிறது என்றார்.

பாகிஸ்தானில் கூட விராட் கோலியை விட சிறந்த வீரர்கள் இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் எங்கள் கிரிக்கெட் அமைப்பு அவர்களை கண்டுக்கொள்வது இல்லை. இது மிகவும் வருத்தமாக உள்ளது. அதேநேரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் காட்டிய நம்பிக்கையை கோஹ்லி சரியாக கையான்றார் மற்றும் அவரது திறமையின் வலிமையில் இந்த நிலையை அடைந்தார் என்றார்.

அதாவது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முதலீடு செய்யத் தயாராக இருந்தால், கோஹ்லியை விட சிறந்த வீரர்கள் பாக்கிஸ்தானில் உள்ளனர் என்று முன்னாள் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் கருதுகிறார் என்று தோன்றுகிறது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.