சர்வதேச கவனத்தை ஈர்க்கும் இந்திய கால்பந்து அணி
கால்பந்து விளையாட்டில் இந்தியா சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் பிரதான விளையாட்டுகளில் கால்பந்து போட்டி என்னதான் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், கிரிக்கெட் போன்ற விளையாட்டு போட்டிகளுக்கு இருக்கும் அளவுக்கு ரசிகர்கள் பட்டாளம் இல்லை என்றே கூறலாம். ஆனால், சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் கால்பந்து போட்டி மீதான ஆர்வம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கால்பந்து போட்டிகளில் விளையாடும் வீரர்களை உற்று கவனிக்கும் இன்றைய தலைமுறை அவர்களுக்கு ரசிகர்களாகவே மாறி, அதேபோல் விளையாட ஊக்குவிக்கும் அளவுக்கு ஆர்வத்தை தூண்ட தொடங்கியுள்ளது. ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய கால்பந்து அணியில் நடந்துள்ள ஒரு சம்பவம் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | Draupadi Murmu: யார் இந்த திரெளபதி முர்மு: பாஜக ஜனாதிபதி வேட்பாளரின் பின்னணி
கால்பந்து அணிக்கு ஜோதிடர் நியமனம்
இது குறித்து கால்பந்து அணியின் நிர்வாகி ஒருவர் பிடிஐ-செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ஆசியக் கோப்பை கால்பந்து அணிக்கு, இந்திய கால்பந்து கூட்டமைப்பு மோட்டிவேட்டர் ஒருவரை ரூ.16 லட்சம் சம்பளத்தில் நியமித்துள்ளது எனவும் அது ஒரு ஜோதிட நிறுவனம் என்றும் கூறியுள்ளார். இந்த தகவல் தனக்கு நியமனத்திற்கு பின்னர்தான் தெரிய வந்தது எனக்கூறியுள்ள அவர், இந்த சம்பவம் இந்திய கால்பந்து விளையாட்டையும், வீரர்களையும் சர்வதேச அளவில் கேலிக்கூத்துக்கு ஆளாக்கியுள்ளது எனவும் கூறியுள்ளார்.
மேலும், சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இந்தியா சிறப்பாக ஆடி பிரதான ஆசியக் கோப்பைக்குத் தகுதி பெற்றது, ஜோதிடர்களின் ஊக்கிவிப்பால்தான் என கூறப்பட்டது. இது அனைவருக்கும் நினைவில் இருக்கும் என தெரிவித்த அவர் இதில் தனக்கு உடன்பாடு இல்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கக் கூடாது - ஆவடி காவல் ஆணையருக்கு ஓ.பி.எஸ். மனு
உலக அரங்கில் கிண்டலுக்கு ஆளாகும் இந்திய கால்பந்து
மேலும் இது குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய கோல் கீப்பர் தனுமாய் போஸ், இந்திய கால்பந்து அணிக்கு ஜோதிடரை நியமித்துள்ள சம்பவம் உலக அரங்கில் பெரிய அளவில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது எனக்கூறினார். மேலும், இந்திய கால்பந்து கூட்டமைப்பு முறையான இளையோர் கால்பந்து லீக் போட்டிகளை நடத்த தவறி விட்டதாக குற்றம் சாட்டிய தனுமாய் போஸ், பல நல்ல கால்பந்து தொடர்களை இந்திய கால்பந்து கூட்டமைப்பு முடக்கியுள்ளது எனவும் விமர்சித்துள்ளார்.
இதோடு விட்டுவிடுவார்கள் என்று நினைத்தால் இந்திய கால்பந்து அணியையும், வீரர்களையும் உலக அளவில் கேலி கிண்டலுக்கு ஆளாக்கும் விதமாக தற்போது ஜோதிடர் நியமனம் நடந்துள்ளதாக தனுமாய் போஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த ஜோதிடம் என்பது வெற்று நாடகம் எனக்கூறியுள்ள அவர், நிர்வாகிகள் தங்கள் வெளிநாட்டு சொகுசுப் பயணத்துக்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என அவேசம் அடைந்துள்ளார். மேலும், இந்திய கால்பந்துக் கூட்டமைப்பில் ஊழல்கள் மலிந்து கிடக்கின்றன எனவும் அதில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் எனவும் கூறிய அவர், இதனை கூடிய விரைவில் உலகத்திற்கே அம்பலப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | சாதாரண விஜய்யை 'சாம்ராட்' விஜய்யாக மாற்றிய 5 படங்கள்! # HBD Vijay
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR