சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் 234 வேலைவாய்ப்புகள் விரைவில் கிடைக்க உள்ளது என்று கிரிக்கெட் வீரர் அஸ்வின் நேற்று டிவிடில் கூறியிருந்தார். இந்நிலையில் தாம் கூறியது அரசியல் ரீதியான கருத்து இல்லை என்று மற்றொரு டிவிட் மூலம் விளக்கம் அளித்துள்ளார் அஸ்வின்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின். சென்னையை சேர்ந்த இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிரடியாக ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார்.
அதில், 'தமிழகத்திலுள்ள அனைத்து இளைஞர்களுக்கும், 234 வேலைவாய்ப்புகள் விரைவில் கிடைக்க உள்ளது'. 234 தொகுதிகள் தமிழகத்தில் இருப்பதையும், விரைவில் ஆட்சி கலைந்து தேர்தல் நடைபெறும் என்றும், தமிழக இளைஞர்கள் அதற்காக விரைவில் தங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள் என்பதையும் அஸ்வின் மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த டிவிட் பதிவான சில நிமிடங்களிலேயே பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் தாம் கூறியது அரசியல் ரீதியான கருத்து இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார் அஸ்வின். இதுகுறித்து தனது டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
நண்பர்களே ப்ளீஸ் கூல் டவுன். இது வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு. அரசியலுக்கு இதில் தொடர்பில்லை.
Guys please cool it down, it is a job creation drive.Nothing to do with Politics.#howmuchtwisting
— Ashwin Ravichandran (@ashwinravi99) February 6, 2017
என கூறியுள்ளார் அஸ்வின்.