)
India Medals At Asian Games 2023: 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் 11வது நாளான இன்று (புதன்கிழமை) இந்தியா மூன்றாவது தங்கம் வென்றுள்ளது. உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ராவை அடுத்து, ஆடவருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய அணி முதலிடம் பிடித்தது. முன்னதாக இன்று வில்வித்தை கலப்பு போட்டியில் தங்கம் வென்றான். இதுவரை இன்று இந்தியா மூன்று தங்கம், நான்கு வெள்ளி, 4 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்றுள்ளது.
முதலாவதாக, ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா 88.88 மீட்டர் ஸ்கோருடன் முதலிடத்தைப் பெற்றார். இந்த போட்டியில் கிஷோர் குமார் ஜெனா 87.54 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாமிடம் பிடித்தார். நான்காவது முயற்சியில் நீரஜ் மற்றும் கிஷோர் சிறப்பாக வீசினர். மறுபுறம் 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய அணி முதலிடம் பிடித்தது.
தற்போது வரை இன்று இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்றுள்ளது. இந்த பதக்கங்களின் மூலம் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 81ஐ எட்டியுள்ளது. இதில் 18 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் அடங்கும்.
Historic GOLD & SILVER for India
— India_AllSports (@India_AllSports) October 4, 2023
Neeraj Chopra wins Gold & Kishore Jena wins Silver medal in Javelin Throw.
Neeraj with SB: 88.88m
Kishore with PB: 87.54m (Also qualifies for Paris Olympics. #AGwithIAS | #IndiaAtAsianGames #AsianGames2022 pic.twitter.com/CRxQN9ZxL0
35 கிமீ ஓட்டப்பந்தயத்தில் இன்றைய முதல் பதக்கம், இதுவரை ஒரு தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியா இன்று (புதன்கிழமை) வெண்கலப் பதக்கத்துடன் தொடங்கியது. 35 கிமீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய கலப்பு அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இதன் பிறகு வில்வித்தை கலப்பு அணி கலவை போட்டியில் தங்கம் வென்றார். இந்தியா ஸ்குவாஷில் மூன்றாவது பதக்கத்தையும், குத்துச்சண்டையில் நான்காவது பதக்கத்தையும் பெற்றது. இந்த இரண்டு போட்டிகலிம் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. குத்துச்சண்டையில் ஐந்தாவது பதக்கமும் கிடைத்தது. லோவ்லினா இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
| வரிசை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
| 1 | சீனா | 167 | 92 | 51 | 310 |
| 2 | ஜப்பான் | 36 | 51 | 55 | 142 |
| 3 | தென் கொரியா | 33 | 44 | 68 | 145 |
| 4 | இந்தியா | 18 | 31 | 32 | 81 |
| 5 | உஸ்பெகிஸ்தான் | 15 | 15 | 22 | 52 |
INDIA HAS WON MEN 4x400 GOLD MEDAL
— IndiaSportsHub (@IndiaSportsHub) October 4, 2023
What a run by the quartet from India as they win Gold Medal at #AsianGames2022
Phenomenal Run by the Boys pic.twitter.com/NqkjWtSi7o
ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த இந்தியா
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 70 பதக்கங்களை வென்றிருந்தது. 1951 ஆம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா ஒரு பகுதியாக இருந்து வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 70 பதக்கங்களை வென்றிருந்தது. இதில் 16 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலம் அடங்கும். பதக்கப் பட்டியலில் நாடு 8வது இடத்தில் இருந்தது. ஆனால் இந்த ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வரலாற்று சாதனை படைத்து வருகிறது. இதக்ரு பிமுன்பு இவ்வளவு பதக்கங்களை வென்றதில்லை. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 81ஐ எட்டியுள்ளது. இதில் 18 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் அடங்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ