ஆசிய கோப்பையை வெல்லும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, தோல்வி முகத்துடன் இருக்கிறது. இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு மிகவும் மங்கியிருக்கும் நிலையில், கேப்டன் ரோகித் சர்மா மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அணி தேர்வு முதல் களத்தில் அவர் செயல்பட்டது வரை என அனைத்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையிடம் தோல்வி
இலங்கை அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் இந்திய அணி களமிறங்கியது. எளிதில் வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோல்வியை தழுவி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அத்துடன் ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டி கனவும் நனவாகிப் போயுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இலங்கை அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணிக்கு வாய்ப்பு இருக்கிறது.
மேலும் படிக்க | இன்னும் இந்தியாவிற்கு ஆசிய கோப்பை இறுதிக்கு செல்ல வாய்ப்பு வாய்ப்புள்ளதா?
அணி தேர்வில் குழப்பம்
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தேர்வு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 20 ஓவர் போட்டிகளில் சொதப்பி வரும் ரிஷப் பன்டுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது ஏன்? தினேஷ் கார்த்திக் மற்றும் அக்சர் படேல் ஆகியோரை அணியில் சேர்ந்திருந்தால், இடது கை பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர் மற்றும் விக்கெட் கீப்பிங் ஆப்சன் அனைத்தும் கிடைத்திருக்கும். இதனை கேப்டன் ரோகித் கருத்தில் கொள்ளாதது ஏன்? என்றும் வினவியுள்ளனர்.
ஒப்புக் கொண்ட ரோகித் சர்மா?
தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இந்த தொடரில் சில பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்தோம். 20 ஓவர் உலகக்கோப்பை வர இருப்பதால், அதனை கருத்தில் கொண்டு அணியை தேர்வு செய்தோம். 2 சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தால் ஒருவர் ஆல்ரவுண்டராக இருக்க வேண்டும், மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் வேண்டும் என்பதற்காக ரிஷப் பன்டுக்கு வாய்ப்பளித்தோம். இந்த முயற்சியில் சில தவறுகள் ஏற்பட்டத்தை காண முடிந்தது. அதனை சரி செய்து உலகக்கோப்பையை சிறப்பாக எதிர்கொள்வோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் படிக்க | Asia Cup2022: விராட் கோலிக்காக காத்திருக்கும் சாதனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ