கொரோனா முழு அடைப்பு நீட்டிப்பு காரணமாக இந்திய தடகள சம்மேளனம் சனிக்கிழமையன்று தனது தேர்தல்களை ஒத்திவைப்பதாக அறிவித்தது.
மற்றும் ஆன்லைனில் நடைபெற்ற ஒரு சிறப்பு பொதுக் கூட்டத்தின் போது அதன் அலுவலர்களின் பதவி காலத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. தற்போதைய தலைவர் அடில் சுமரிவல்லா 2016 ஏப்ரலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அவரது பதவிகாலம் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் அதன் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் AFI தேர்தலை நடத்தவிருந்தது, ஆனால் COVID-19 தொற்றுநோய் தற்போது தேர்தலை ஒத்திவைக்க கூட்டமைப்பை கட்டாயப்படுத்தியுள்ளது.
சனிக்கிழமையின் கூட்டம் தேர்தலை நடத்துவதற்கான எந்த தேதியையும் குறிப்பிடவில்லை, ஆனால் "நேரடி சந்திப்பு கூட்டம் சாத்தியமாகும்போது" அவை நடத்தப்படலாம் என்று AFI கூறியது.
மேலும், மூத்த சகாக்களுடன் கலந்தாலோசித்து தேர்ந்தெடுக்கப்பட்ட வருடாந்திர பொதுக் கூட்டத்தின் தேதி குறித்து முடிவெடுக்க சுமரிவல்லாவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. மேலும் தேர்தல் முழுவதுமாக வரு வருடாந்திர காலத்திற்கு ஒத்தி வைக்கப்படவில்லை, மூன்று மாதங்கள் அல்லது ஆறு மாதங்களில் மீண்டும் தேர்தல் நடத்தப்படலாம். ஆனால் எப்போது என்பது உறுதியாக தெரியாது என கூட்டமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.
"AFI இன் காலத்தை நீட்டிக்கும் திட்டத்திற்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்திருந்தாலும், நாங்கள் சரியான செயல்முறையைப் பின்பற்றுவது முக்கியம்," என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ரிட்டர்னிங் அதிகாரியை நியமித்து, உறுப்பினர்களிடமிருந்து பிரதிநிதிகளின் பரிந்துரையைப் பெறுவதன் மூலம் தேர்தல் நடைமுறைகளை AFI துவக்கியுள்ளது. எனினும் கொரோனா பாதிப்பால் தேர்தலை தற்போது ரத்து செய்துள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOA) உறுப்பினரும், IOA தலைவருமான நரிந்தர் துருவ் பாத்ராவின் ஆலோசனையை AFI ஏற்றுக்கொண்டதன் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தேர்தல் ஒத்திவைப்பு குறித்து விளையாட்டு அமைச்சகத்திற்கு AFI தகவல் அளித்துள்ளதாக பொருளாளர் பி.கே.ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.