ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்ணர் தனது 15-வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்துள்ளார்!
ICC கிரிக்கெட் உலக கோப்பை 2019 தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் 17-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது.
இதனையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் மட்டுமே குவித்தது. அணியின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்ணர் அதிரடியாக விளையாடி 111 பந்துகளில் 1 சிக்ஸர் மற்றும் 11 போர்ஸ் உள்பட 107 ரன்கள் குவித்தார். இப்போட்டில் வார்ணர் பூர்த்தி செய்த சத்தின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15 சதம் அடித்தவர் பட்டியலில் இணைந்தார்.
108 சர்வதேச இன்னிங்ஸ் விளையாடியுள்ள டேவிட் வார்ணர் இதுவரை 4598 ரன்கள் குவித்துள்ளார். இதில் 15 சதம் மற்றும் 19 அரை சதங்கள் அடக்கம்.
இன்று தான் பூர்த்தி செய்த சதத்தின் மூலம் உலக கோப்பை தொடர்களில் தனது 2-வது சதத்தையும் எட்டியுள்ளார் வார்ணர். அதேவைளையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 3-வது சதம் அடித்த வீரர்களின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.
சமீபத்தில் பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி ஒரு ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்ட வார்ணர் தற்போது இடம்பெற்றுள்ள உலக கோப்பை தொடரில் திறனான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். முன்னதாக கடந்த 2015-ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் அப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 178 ரன்கள் குவித்ததன் மூலம் தனது முதல் உலக கோப்பை சதத்தை பூர்த்தி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.