பெண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடி வரும் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தனது காலிறுதி போட்டோயில் ஜப்பானின் நோசொமி ஒக்குஹாராவை 21-17, 21-19 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம் பி.வி. சிந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் உலக தரவரிசையில் 3 ஆம் இடத்தில் இருக்கும் பி.வி. சிந்து, 2 ஆம் இடத்தில இருக்கும் ஜப்பானின் அகானே யமகூச்சியை எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 19-21, 21-19, 21-18 என்ற கணக்கில் 2 ஆம் நிலை வீரரை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றார்.
Up next on Court 1: WS Semi-Finals Pusarla V. Sindhu vs. Akane Yamaguchi
see more on https://t.co/Hltm3xVRfv #TOTALBADMINTON #TOTALBWFWC2018 pic.twitter.com/zZ6XpTYuB3
— BWF (@bwfmedia) August 4, 2018
இன்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் மற்றும் சீனாவின் பிங்ஜியாவோ மோதின. இதில் கரோலினா மரின் வெற்றி இறுதி போட்டிக்கு நுழைந்துள்ளார்.
உலக பேட்மிண்டன் இறுதிபோட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் மற்றும் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மோதுவார்கள்.