இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமனம்

Last Updated : Jul 18, 2017, 04:24 PM IST
இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே கடந்த மாதம் 20-ம் தேதி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பொறுப்பிலிருந்து விலகினார்.

இதற்கிடையே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. 

இந்நிலையில், புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் உதவி பந்து வீச்சு பயிற்சியாளராக சஞ்செய் பாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சியாளர்கள் அடுத்த நடக்க விருக்கும் உலக கோப்பை போட்டி வரை பதவியில் இருப்பார்கள் என்று என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories

Trending News