லார்ட்ஸை நினைவில் வைத்துக்கொண்டு, லீட்ஸ் மறந்துவிடுங்கள். நல்ல தருணங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதுபோன்ற விஷயங்கள் போட்டிகளில் நடந்து கொண்டே இருக்கும் என அணிக்கு நம்பிக்கை அளித்த ரவி சாஸ்திரி.
புதிய பயிற்சியாளர் குறித்து விராட் கோலியிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என பயிற்சியாளர் தேர்வு குழு உறுப்பினர் அனுஷுமன் கெய்க்வாட் தெரிவத்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக எங்கள் அணி சிறப்பாக விளையாடுகிறது. அணியில் எந்தவி பிரச்சனையும் இல்லை என்பதற்கு இதுவே சான்று என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இணைந்து காணப்படும் புகைப்படம் ஒன்று நேற்று (வியாழக்கிழமை) இரவு முதல் வைரலாக பரவி வருகிறது.
இந்த படத்தில், ஷாஸ்திரியிடம் டோனி பேட்டிங் யுக்திகளை பயிற்சி பெறுவது போல் காண்பிக்க பட்டிருக்கிறது.
மாலை சமய பயிற்சியின் பொது எடுக்கப்பட்ட இந்த புகைபடத்தில் தோனி மையபுள்ளியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே, ஷர்டுல் தாகூர், யூசுவெந்திர சஹால் மற்றும் ஜாஸ்ரிட் பம்ரா ஆகியோரும் இவர்களுடன் இணைந்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே கடந்த மாதம் 20-ம் தேதி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பொறுப்பிலிருந்து விலகினார்.
இதற்கிடையே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி கடந்த செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார். மேலும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஜாகீர்கான் பந்து வீச்சு பயிற்சியாளராகவும், ராகுல் டிராவிட் பேட்டிங் ஆலோசகராகவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று டெல்லியில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாக கமிட்டி உறுப்பினர் வினோத் ராய், டியானா எடுல்ஜி, தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி. இவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும், இயக்குனராகவும் செயல்பட்டார். லோகேஷ் ராகுலை குறித்து அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்று கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.