ஹர்பஜன், இர்பான் பதான் வரிசையில் பும்ரா-வும் இணைந்தார்!

மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான போட்டியில் ‘டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது இந்திய வீரர்’ என்ற சாதனையைப் படைத்தார் பும்ரா.

Updated: Sep 1, 2019, 12:42 PM IST
ஹர்பஜன், இர்பான் பதான் வரிசையில் பும்ரா-வும் இணைந்தார்!

மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான போட்டியில் ‘டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது இந்திய வீரர்’ என்ற சாதனையைப் படைத்தார் பும்ரா.

மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று இந்திய அணி பேட்டிங்கிலும் பௌலிங்கிலும் சிறப்பாக விளையாடியது. வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் ஓர் ஹார்டிக்கும் அடக்கம்!

ஜமைக்காவில் கிங்ஸ்டனில் நடைப்பெற்று வரும் இப்போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் குவித்தது. நேற்று நடைபெற்ற இரண்டாவது நாள் ஆட்டத்தில் பேட்டிங்கைத் தொடர்ந்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் குவித்திருந்தது. விஹாரி 111 ரன்களும் இஷாந்த் சர்மா 57 ரன்களும் குவித்தனர். 

இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. அப்போது பும்ரா அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனைப் படைத்தார். 

அவர் ப்ராவோ, ப்ரூக்ஸ், சேஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி, ஹர்பஜன் சிங், இர்பார் பதானுக்குப் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெடுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 

மேலும் முதல் இன்னிங்ஸில் மட்டும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நேற்றைய நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதல் டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இன்று மூன்றாவது நாள் போட்டி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.