இறுதி ஓவரில் வெற்றி இலக்கை எட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்!

டெல்லி கேப்பிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற IPL லீக் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது!

Last Updated : Mar 26, 2019, 11:54 PM IST
இறுதி ஓவரில் வெற்றி இலக்கை எட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்! title=

டெல்லி கேப்பிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற IPL லீக் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது!

IPL 2019 தொடரின் 5-வது லீக் ஆட்டம் இன்று டெல்லி பெரோஷ் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.

இப்போடியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. துவக்க வீரராக களமிறங்கிய பிரத்திவி ஷா 24(16), ஷிகர் தவான் 51(47) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் 18(20), ரிஷாப் பன்ட் 25(13), இன்கிராம் 2(2) என அடுத்தடுத்து வெளியேறினர்.

இதனால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்துள்ளது. 

சென்னை அணி தரப்பில் டெயின் பிராவோ 3 விக்கெட் வீழ்த்தினார். தீபக் சாஹர், ஜடேஜா மற்றும் இம்ரான் தாஹிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து 148 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய ஷேன் வாட்சன் 44(26), அம்பத்தி ராயுடு 5(5) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ரெய்னா 30(16) ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இவர்களை தொடந்து களமிறங்கிய கேதர் ஜாதவ் 27(33) ரன்கள் குவித்து இறுதி ஓவரில் வெளியேறினார். மறுமுனையில் தோனி 32(35) ரன்களுடன் காத்திருக்க, இறுதியாக களமிறங்கிய பிராவோ 4(3) ரன்கள் குவித்து ஆட்டத்தின் 19.3-வது பந்தில் அணியின் வெற்றியை உறுதி செய்தார். டெல்லி அணி தரப்பில் அமித் மிஷ்ரா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆட்ட நாயகன் விருது ஷேன் வாட்சனுக்கு அளிக்கப்பட்டது.

இப்போட்டியின் வெற்றியின் மூலம் சென்னை அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

Trending News