இதற்காக தான் சேத்தன் சர்மாவை பிசிசிஐ நீக்கியதா? பகீர் பின்னணி!

டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி வெளியேறியதை அடுத்து, சேத்தன் சர்மா தலைமையிலான 5 பேர் கொண்ட தேர்வுக் குழுவை பிசிசிஐ நீக்கியது.  

Written by - RK Spark | Last Updated : Nov 19, 2022, 08:39 AM IST
  • சேத்தன் சர்மாவை அதிரடியாக நீக்கிய பிசிசிஐ.
  • உலக கோப்பை தோல்வியால் நடவடிக்கை.
  • புதிய தேர்வாளருக்கு விண்ணப்பிக்க பிசிசிஐ பரிந்துரை.
இதற்காக தான் சேத்தன் சர்மாவை பிசிசிஐ நீக்கியதா? பகீர் பின்னணி! title=

இந்த ஆண்டு 2022 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் படு தோல்வி அடைந்து வெளியேறியது.  பாகிஸ்தான், நெதர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான த்ரில் வெற்றிகளுடன் சாகசமாக இந்திய அணி 8 புள்ளிகளுடன் குழுவில் முதலிடத்தை அடைந்து அரையிறுதியை எட்டியது, ஆனால் இங்கிலாந்து அணி அரையிறுதியில் வெற்றி பெற்று, பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது.  டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி  இரண்டாவது 10 விக்கெட் தோல்வியை சந்தித்தனர், முன்னதாக கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இதே சம்பவம் நடைபெற்றது.  இந்த இரண்டு மோசமான தோல்விகளும் சேத்தன் சர்மாவை நீக்க முக்கிய காரணிகளாக மாறின.  

மேலும் படிக்க | உதவிக்கு அழைத்தாரா பாண்டியா... நியூசிலாந்து பறந்த குஜராத் பயிற்சியாளர் - ஏன் தெரியுமா?

சேத்தனின் பதவிக் காலத்தில், இந்தியா 2021 டி20 உலகக் கோப்பையில் நாக்-அவுட் கட்டத்தை எட்டத் தவறியது மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது.  ஒருநாள் போட்டித் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்போதைய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியுடன் பகிரங்கமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் இந்தியா தொடர் தோல்விகளை சந்தித்தது, மேலும் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் கோஹ்லி விலகினார். ரோஹித் அனைத்து வடிவங்களிலும் கேப்டனாக பொறுப்பேற்றார். இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் வெற்றிகளைத் பெற்றது. 

sethan

ஆனால் உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆசிய கோப்பையில் இந்தியா தோல்வியடைந்தது.  பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான தொடர்ச்சியான தோல்விகள் இந்தியாவின் பலவீனத்தை அம்பலப்படுத்தியது. மேலும் ஒரே வருடத்தில் 8 கேப்டன்களை மாற்றியது, -8 மாத இடைவெளிக்கு பிறகு கே.எல்.ராகுலை தேர்வு செய்தது, - உள்நாட்டு மற்றும் ஐபிஎல் வீரர்களை தேர்வு செய்யாதது போன்றவைகளும் சேத்தன் சர்மாவிற்கு பின்னடைவாக அமைந்தது.  இதற்கிடையில் சவுரவ் கங்குலியின் பதவிக்காலம் முடிவடைந்தது, ரோஜர் பின்னி பொறுப்பேற்றார். இப்போது தேர்வுக் குழு நீக்கப்பட்டதன் மூலம், 2023ல் சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன் பிசிசிஐக்கு இது ஒரு மாற்றத்தின் காலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ’பவர்பிளே கிங்’ புவனேஷ்வர் குமாருக்காக காத்திருக்கும் மற்றொரு ரெக்கார்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News