சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சன்-யூ -வை வீழ்த்தி சிந்து சாம்பியன்
பட்டத்தை வென்றார். 21- 11, 17 - 21, 21 - 11 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து , சன் யூ-வை வீழ்த்தினார். ஒரே ஆண்டில் 3 பேட்மிண்டன் தொடர்களில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சிந்து சாதனை படைத்துள்ளார்.
அரையிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி சிந்து, தென் கொரியாவின் சங் ஜி யுங் மோதினர். அவரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று ன வீராங்கனை சன்-யூ -வை வீழ்த்தி சிந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சிந்து, தற்போது சீன ஓபன் போட்டியில் தொடர் வெற்றிகளை பெற்று சாதனை படைத்துள்ளார்..