தோனிக்காக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் 2024 இறுதி போட்டி?

IPL 2024 Final: ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி சென்னை நடைபெறும் என்றும், அகமதாபாத்தில் இரண்டு பிளேஆஃப் போட்டிகள் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Mar 24, 2024, 01:26 PM IST
  • சென்னையில் ஐபிஎல் இறுதி போட்டி.
  • குஜராத்தில் பிளே ஆப் நடைபெற உள்ளது.
  • விரைவில் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு.
தோனிக்காக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் 2024 இறுதி போட்டி? title=

IPL 2024 Final: நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸின் சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் 2024ன் இறுதி போட்டி நடைபெற உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இரண்டு தகுதிச் சுற்றுகளில் ஒன்றும் சென்னையில் நடந்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஐபிஎல்லில் எப்போதும் முதல் போட்டியும், கடைசி போட்டியும் கடந்த ஆண்டு வெற்றி பெற்ற அணியின் சொந்த மைதானத்தில் நடைபெறும். அந்த வகையில் 2022ல் ஐபிஎல் பட்டத்தை வென்ற குஜராத் அணியின் சொந்த மைதானமான அகமதாபாத்தில் ஐபிஎல் 2023ன் முதல் மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது.  இந்த இரண்டு போட்டிகளிலும் சென்னை மற்றும் குஜராத் அணிகள் விளையாடியது.  ஐபிஎல் 2023 பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வென்று இருந்தது.

மேலும் படிக்க | பதிரானா வந்தாச்சு... இனி சிஎஸ்கேவில் 'இந்த' பிரச்னை இருக்காது - வெளியேறப் போவது யாரு?

ஐபிஎல் 2024ன் தொடக்க ஆட்டம் மார்ச் 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.  முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடியது.  இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது சென்னையில் பைனல் போட்டிகள் நடைபெற உள்ளது என்று கூறப்படுகிறது.  மேலும் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மற்ற தகுதிச் சுற்று மற்றும் எலிமினேட்டரை நடைபெற உள்ளது.  “ஐபிஎல் குழு கடந்த ஆண்டு நடப்பு சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸின் சொந்த மைதானத்தில் தொடக்க ஆட்டத்தையும் இறுதிப் ஆட்டத்தையும் நடத்தும் பாரம்பரியத்தைப் பின்பற்றுகிறது” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் ஐபிஎல்லின் கடைசி இரண்டு சீசன்களின் இறுதிப் போட்டியை நடத்தியது.  தற்போது இந்த ஆண்டு குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் முகமது ஷமி ஆகிய இரு முக்கிய புள்ளிகள் இல்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஐபிஎல் 2024ன் முதல் போட்டியில் விளையாட உள்ளது குஜராத். எவ்வாறாயினும், மீதமுள்ள சீசனுக்கான போட்டி அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அடுத்த சில நாட்களில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.  மக்களை தேர்தல் நடைபெற உள்ளதால் ஏப்ரல் 7ஆம் தேதி வரை மட்டுமே தற்போது போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள ஆட்டங்களுக்கான அட்டவணை தற்போது இறுதி செய்யப்பட்டு பிளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டிக்கான தேதிகள் அறிவிக்கப்பட உள்ளது.

"இந்திய தேர்தல் ஆணையம் பொதுத் தேர்தல் அட்டவணையை சமீபத்தில் அறிவித்தது. மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.  எனவே ஐபிஎல் போட்டிகளை எந்தவித சிக்கலும் இன்றி நடத்த சரியான தேதிகளை நாங்கள் வகுத்துள்ளோம். மீதமுள்ள போட்டிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன, மேலும் வாக்குப்பதிவு தேதிகளுடன் ஐபிஎல் போட்டிகள் எந்த ஒரு சிக்கலையும் ஏற்படுத்தாமல் இருக்க சில மாற்று வேலைகளை நாங்கள் செய்து வருகிறோம்" என்று ஐபிஎல் தலைவர் அருண் துமால் பிடிஐயிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | KKR vs SRH: கிளாசெனின் மொத்த அதிரடியும் வீண்... பதைபதைக்க வைத்த கடைசி ஓவர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News