உலகக் கோப்பை கனவில் இந்திய அணி... குறுக்கே நிற்கும் மூன்று முரட்டு அணிகள் இவை தான்!

ICC World Cup 2023: இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில், சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்திய அணிக்கு பெரும் தடையாக இருக்கும் 3 முக்கிய அணிகள் குறித்து இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Aug 24, 2023, 01:05 PM IST
  • உலகக் கோப்பை தொடர் வரும் அக். 5ஆம் தேதி தொடங்கும்.
  • இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
  • நவ. 19ஆம் தேதி இறுதிப்போட்டி அகமதாபாத் நகரில் நடக்கிறது.
உலகக் கோப்பை கனவில் இந்திய அணி... குறுக்கே நிற்கும் மூன்று முரட்டு அணிகள் இவை தான்! title=

ICC World Cup 2023: ஒரு நாள் போட்டி வடிவிலான ஐசிசி உலகக் கோப்பை தொடர் இந்திய மண்ணில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி வலுவான போட்டியாளராகக் கருதப்படுகிறது. ஆனால் கோப்பையை வெல்லும் இந்திய அணியின் கனவை உடைக்க 3 அணிகள் காத்திருக்கின்றன. 

உலகக் கோப்பையை வெல்லும் இந்திய அணியின் கனவை முறியடிக்கக்கூடிய 3 அணிகளாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பார்க்கப்படுகிறது. ஒருநாள் போட்டிகளில் மிகவும் ஆபத்தான அணிகளாக தற்போது இவை உள்ளன. கடைசியாக 2019ஆம் ஆண்டு விளையாடிய ஒருநாள் உலகக் கோப்பைப் தொடரின் சாம்பியன்ஷிப் பட்டத்தை இங்கிலாந்து வென்றது. அந்த தொடரில், இந்தியா அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது.

1. இங்கிலாந்து

நடப்பு 50 ஓவர் உலக சாம்பியனான இங்கிலாந்து அணி, இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இங்கிலாந்து அணியில் டாப் ஆர்டர் முதல் லோயர் ஆர்டர் வரை ஆபத்தான வீரர்கள் நிறைந்துள்ளனர். ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் இங்கிலாந்து பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கிறார்கள்.

அதே நேரத்தில், அவர்கள் பந்துவீச்சு பிரிவிலும் சாம்பியன் வீரர்களையும் கொண்டுள்ளனர். உலகக் கோப்பையில் இந்திய அணி இங்கிலாந்திடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இங்கிலாந்து ஒருநாள் அணியில் மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ், சாம் கரான், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மொயின் அலி மற்றும் அடில் ரஷித் போன்ற அச்சுறுத்தும் பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

மேலும் படிக்க | ஆசிய கோப்பை போட்டித்தொடரில் அதிக ரன்கள் எடுத்த கிரிக்கெட்டர்களின் பட்டியல்

2. பாகிஸ்தான்

இந்திய சூழல்கள் பாகிஸ்தான் அணிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் பாகிஸ்தான் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள், அச்சுறுத்தும் சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் அதிரடி காட்டும் பேட்டர்களை கொண்டுள்ளது. துணைக் கண்டம் போன்ற சூழ்நிலைகளில், பாகிஸ்தான் அணி எப்போதும் சிறப்பாக செயல்படும். இந்த ஆண்டு உலகக் கோப்பையில் மிகவும் கடினமான அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் கருதப்படுகிறது. உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்திய அணி கவனமாக இருக்க வேண்டும். பாகிஸ்தானின் பேட்டர்கள் நீண்ட தூர ஷாட்களை அடிக்கும் திறன் கொண்டவர்கள். பாகிஸ்தான் அணி எந்த போட்டியையும் மாற்றும் வல்லமை படைத்ததாக காணப்படுகிறது.

3. ஆஸ்திரேலியா

இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரை வெல்லக்கூடிய, வலுவான போட்டியாளராக ஆஸ்திரேலியா அணி கருதப்படுகிறது. ஆஸ்திரேலியா அணி 5 முறை ஒருநாள் உலகக் கோப்பையை வென்றுள்ளது. ஆஸ்திரேலியா 1987, 1999, 2003, 2007 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் ஒருநாள் உலகக் கோப்பை கோப்பையை கைப்பற்றியது. இது தவிர, ஆஸ்திரேலிய அணி 2021ஆம் ஆண்டில் டி20 உலகக் கோப்பை மற்றும் 2023ஆம் ஆண்டின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் பாட் கம்மின்ஸ் போன்ற அச்சுறுத்தும் வீரர்கள் உள்ளனர், அவர்கள் உலகக் கோப்பை தொடரை இந்த முறை வெல்லக்கூடியவர்களாக உள்ளனர். உலகக் கோப்பையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் விளையாடும் போது தனி அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். உலகக் கோப்பையில் இந்தியாவின் முதல் ஆட்டம் அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தான். அதுவும் நம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியாவால் அக். 5ஆம் தேதி முதல் நவ. 19ஆம் தேதி வரை நடத்தப்படும். 10 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கும். மொத்தம் 48 போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளோடு தலா 1 முறை மோதும். ஆஸ்திரேலிய அணி அதிகபட்சமாக 5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. இது தவிர இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் 2 முறையும், இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் தலா ஒரு முறையும் பட்டத்தை வென்றுள்ளன. 2023 கிரிக்கெட் உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டம் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையே அக். 5ஆம் தேதி அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்.

மேலும் படிக்க | FIDE: நேற்று சந்திரயான்! இன்று பிரக்ஞானந்தா! இந்தியர்களுக்கு இன்றும் மகிழ்ச்சி தொடருமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News