ரவிசாஸ்திரியிடம் பயிற்சிபெரும் தோனி: வைரல் புகைப்படங்கள்!

Last Updated : Aug 18, 2017, 12:14 PM IST
ரவிசாஸ்திரியிடம் பயிற்சிபெரும் தோனி: வைரல் புகைப்படங்கள்!

முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இணைந்து காணப்படும் புகைப்படம் ஒன்று நேற்று (வியாழக்கிழமை) இரவு முதல் வைரலாக பரவி வருகிறது.

இந்த படத்தில், ஷாஸ்திரியிடம் டோனி பேட்டிங் யுக்திகளை பயிற்சி பெறுவது போல் காண்பிக்க பட்டிருக்கிறது.

மாலை சமய பயிற்சியின் பொது எடுக்கப்பட்ட இந்த புகைபடத்தில் தோனி மையபுள்ளியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே, ஷர்டுல் தாகூர், யூசுவெந்திர சஹால் மற்றும் ஜாஸ்ரிட் பம்ரா ஆகியோரும் இவர்களுடன் இணைந்துள்ளனர்.

 

 

முன்னதாக டெஸ்ட் தொடரில் இந்தியா 3-0 என்ற தொடரில் தொடரை வென்றது. 

இத்தொடரில் மீதம் நடக்கவிருக்கும் ஐந்து ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் மேற்கண்ட அணி பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இருதரப்புக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) கொழும்பில் நடக்கவுள்ளது.

More Stories

Trending News