அடித்தது அதிர்ஷ்டம்! இந்திய அணிக்கு கேப்டனான தினேஷ் கார்த்திக்

கவுண்டி கிரிக்கெட் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் தினேஷ் கார்த்திக்  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 1, 2022, 04:53 PM IST
  • இந்திய அணிக்கு கேப்டனான தினேஷ் கார்த்திக்
  • பயிற்சி ஆட்டத்தில் கேப்டனாக களமிறங்குகிறார்
  • அடுத்தடுத்த சர்பிரைஸால் மகிழ்ச்சியில் டிகே
அடித்தது அதிர்ஷ்டம்! இந்திய அணிக்கு கேப்டனான தினேஷ் கார்த்திக் title=

தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் நாளுக்கு நாள் புதிய உயரத்தை அடைந்து கொண்டே செல்கிறார். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கிட்டத்தட்ட ஓய்வு பெற்றுவிடுவார் என உலகமே கூறிக் கொண்டிருந்தது. அவருக்கும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இதனால், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ண்ணையாளராக கூட பணியாற்றினார். 

மேலும் படிக்க | இந்திய டெஸ்ட் அணியில் களமிறங்கப்போகும் ஆர்சிபி வீரர்! கேப்டன் பும்ரா முடிவு

ஆனால் என்னால் கிரிக்கெட் ஆட முடியும் என்பதில் விடாப்பிடியாக இருந்து கொண்டே இருந்தார். அதனை வார்த்தைகளால் சொன்னால் தன்னை இந்த உலகம் கேலி செய்யும் என்பதை உணர்ந்த அவர், வாய்ப்புக்காக காத்திருந்தார். ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த அவரை, அந்த அணி கடந்த ஐபிஎல் போட்டியில் விடுவித்தது. அதனால் என்ன? ஆர்சிபி அணி தினேஷ் கார்த்திக்கின் திறமையை அறிந்து வாய்ப்பு கொடுத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

ஆர்சிபி அணி வீழும் நிலை வந்தபோதெல்லாம், தனி ஒரு ஆளாக மைதானத்தில் பந்துகளை பறக்கவிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். நான் திரும்ப வந்துட்டேனு சொல்லு! என சொல்லி சொல்லி பந்துகளை அடித்தார். அப்போதே விராட்கோலியுடனான உரையாடலில், இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தார். வயதை மட்டும் பார்த்தவர்களுக்கு அவருடைய ஆட்டம் பதிலடி கொடுத்தது. இத்தனை நாள் விமர்சித்தவர்கள் கூட தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அந்த வாய்ப்பும் தேடி வந்தது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடர்களில் இந்திய அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். இத்தனை ஆண்டுகளாக கடினமாக உழைத்து கிடைத்த வாய்ப்பு விட்டுவிடுவாரா என்ன? தன்னுடைய திறமையை அந்த தொடரிலும் நிரூபித்தார். சிறப்பாக விளையாடி, மேலும் தன்னுடைய இருப்பை தக்க வைத்துக் கொண்டார்.

அதற்கு பரிசாக அயர்லாந்து அணிக்கான தொடரிலும் வாய்ப்பு தேடி வந்தது. அதனைப் பயன்படுத்திக் கொண்ட தினேஷ் கார்த்திக்கிற்கு, இங்கிலாந்து அணிக்கான தொடரிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 20 ஓவர் போட்டிக்கு முன்பாக இந்திய அணி 2 பயிற்சி ஆட்டங்களில் ஆட உள்ளது. கவுண்டி கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆடும் இந்த 2 பயிற்சி ஆட்டங்களுக்கும் தினேஷ் கார்த்திக் தான் கேப்டனாம்.  வாழ்த்துகள் தினேஷ் கார்த்திக்! இன்னும் உயருங்கள்...!

மேலும் படிக்க | இங்கிலாந்தில் வரலாறு படைக்குமா இந்தியா? பும்ராவுக்கு காத்திருக்கும் சவால்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News