தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலி: நியூஸிலாந்து - பாகிஸ்தான் போட்டிகள் நிறுத்தம்

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து - பாக்கிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் கைவிடபட்டது.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 17, 2021, 04:20 PM IST
தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலி: நியூஸிலாந்து - பாகிஸ்தான் போட்டிகள் நிறுத்தம்

பாகிஸ்தான் சென்றுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 t20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட சென்றது.  ராவல்பிண்டி மைதானத்தில் ஒரு நாள் போட்டிகளும், லாகூர் மைதானத்தில் T20 போட்டிகளும் நடைபெற இருந்தன.  இந்நிலையில் இன்று முதலாவது ஒருநாள் போட்டி நடை பெற இருந்தது.   இந்நிலையில் இன்றைய போட்டியில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என்று நியூசிலாந்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.  இதனை அடுத்து, இரு நாட்டு வீரர்களும் அவர்களது அறைகளில் இருந்து வெளிய வரவில்லை.  மேலும், தங்கள்து நாட்டிற்கு திரும்புவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

newzeland

இந்த சம்பவம் குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறுகையில், " எங்கள் நாட்டு உளவுத்துறையில் இருந்து கிடைத்த தகவலின் படி நாங்கள் எங்கள் நாட்டு வீரர்களுடன் உடனடடியாக நாடு திரும்புகிறோம்.   இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஒரு கருப்பு புள்ளி தான்.  எங்களை சிறப்பாக கவனித்து கொண்டனர்.  இருப்பினும் வீரர்களின் பாதுகாப்பு மிகவும் அவசியமானது.  அதை கருத்தில் கொண்டே நாடு திரும்புகிறோம் என்று தெரிவித்தனர்.  

தற்போது மைதானத்தில் வெடிகுண்டு இருக்கிறதா என்ற சோதனை நடைபெற்று வருகிறது.  2009 ம் ஆண்டு பாகிஸ்தான் சுற்று பயணம் சென்ற இலங்கை அணியின் மீது தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News