இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை வென்றது இங்கிலாந்து மகளிர் அணி!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் சமீபத்தில் முடிவடைந்தது. இத்தொடரினை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வென்றது.
இதனையடத்து தற்போது டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்னதாக முதல் டி20 போட்டியை கைப்பற்றிய இங்கிலாந்து மகளிர் அணி, இன்று இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் கௌஹாத்தி பரஸ்பரா மைதானத்தில் எதிர்கொண்டது.
England Women Won by 5 Wicket(s) #INDvENG @Paytm #T20Series Scorecard:https://t.co/O5J3mIOjh5
— BCCI Women (@BCCIWomen) March 7, 2019
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடிது. இதனையடுத்து முதலாவதாக களமிறங்கிய இந்திய வீராங்கனைகள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் குவித்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக மித்தாளி ராஜ் 20 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க வீராங்கனை டேனியல் வெயிட் அதிரடியாக விளையாடி 64(55) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக வின்பில்ட் 29(23) ரன்கள் குவித்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர். எனினும் ஆட்டத்தின் 19.1-வது பந்தில் 5 விக்கெட் மட்டுமே இழந்த இங்கிலாந்து போராடி தனது வெற்றியை பதிவு செய்தது. இந்தியா சார்பில் ஏக்தா 2 விக்கெட்டுகளை குவித்தார்.
இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இங்கிலாந்து டி20 தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றியது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் மார்ச் 9-ஆம் நாள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.