நாங்க ஒன்னும் சும்மா இல்ல.... கடைசி நிமிடத்தில் சாதித்த குரேஷியா

32 நாடுகள் பங்குபெற்ற உலக்கோப்பை கால்பந்து தொடரில் இறுதி ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளது. 

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Jul 12, 2018, 03:50 PM IST
நாங்க ஒன்னும் சும்மா இல்ல.... கடைசி நிமிடத்தில் சாதித்த குரேஷியா
Pic Courtesy : @FIFAWorldCup

ரஷ்யாவில் நடைப்பெற்று வரும் ஃபிபா உலக்கோப்பை கால்பந்து பரப்பரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது. நான்கு அணிகள் பங்கேற்ற அரையிறுதி ஆட்டத்தில், முதல் சுற்றில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி சுற்றில் இங்கிலாந்து மற்றும் குரேஷியா அணிகள் மோதின. இதை ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு ஆரம்பமானது. போட்டி ஆரம்பமான 5_வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி கோல் போட்டது. இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகித்தது. தொடர்ந்து இரண்டு அணிகளும் ஆக்ரோசமாக விளையாடியது. இதில் 68_வது நிமிடத்தில் குரேஷியா அணி போட்டது. இறுதி வரை ஸ்கோர் 1-1 என்ற கணக்கில் சமநிலை அடைந்தது. பின்னர் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. 109_வது நிமிடத்தில் குரேஷியா அணி மீண்டும் கோல் போட்டது. 2-1 என்ற கணக்கில் குரேஷியா அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

முதல் முறையாக குரேஷியா அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று சாதனை புரிந்துள்ளது. வரும் 15 ஆம் தேதி நடைபெற உள்ள பைனலில் பிரான்ஸ் அணியை எதிர்க்கொள்கிறது குரேஷியா அணி.