பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முகுருசா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

Last Updated : Jun 6, 2016, 08:47 AM IST
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முகுருசா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். title=

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் அரை இறுதியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் நெதர்லாந்தின் கிகி பெர் டென்ஸை மோதினர். இதில் செரீனா 7-6, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இரண்டாவது அரையிறுதியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருசா மற்றும் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் மோதின. இதில் முகுருசா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் நுழைந்தார். 

இறுதிப்போட்டியில் செரீனா மற்றும் முகுருசா இருவரும் மோதினார்கள். முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் வென்ற முகுருசா அடுத்த செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது முகுருசா வெல்லும் முதலாவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். 

இந்த வெற்றியைக்குறித்து பேசிய முகுருசா:- மிகச்சிறந்த வீராங்கனை ஒருவரை வீழ்த்து முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய போட்டியில் செரினா வில்லியம்ஸ் சிறப்பாக ஆடினார். அவரை வீழ்த்துவது கடினமாக இருந்தது என்றார்.

Trending News