அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றதன் மூலம் மகளிர் ஒற்றையர் பிரிவில் 101-வது வெற்றியை பதிவு செய்து புதிய மைல்கல்லை அடைந்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் 2-ம் நிலை வீராங்கனை செரீனா வில்லியம்சும் அவரது சகோதரியும் 13-ம் நிலை வீராங்கனையுமான வீனஸ் வில்லியம்சும் மோதினர்.
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.
ஆண்களுக்கான பிரிவில் இன்று நடக்கும் முதல் சுற்று போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியா நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச், 177-ம் நிலையில் இருக்கும் இங்கிலாந்தின் ஜேம்ஸ் வார்டை சந்திக்கிறார்.
மற்றொரு சுற்றில் சுவிட்சர்லாந்து சேர்ந்த முன்னணி வீரரான ரோஜர் பெடரர், அர்ஜென்டினாவை சேர்ந்த குயிடோ பெல்லாவை எதிர்த்து ஆடுகிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் அரை இறுதியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் நெதர்லாந்தின் கிகி பெர் டென்ஸை மோதினர். இதில் செரீனா 7-6, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இரண்டாவது அரையிறுதியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருசா மற்றும் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் மோதின. இதில் முகுருசா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் நுழைந்தார்.

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.