தேர்வுகுழுவில் மாற்றம் தேவை... மீண்டும் கொந்தளித்த ஹர்பஜன்!

திங்களன்று அறிவிக்கப்பட்ட இந்தியா அணிகளில் சூர்யகுமார் யாதவை தவிர்த்த தேர்வுக் குழுவை, பக்கச்சார்பான தேர்வுகுழு என சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்!

Last Updated : Dec 24, 2019, 08:42 PM IST
தேர்வுகுழுவில் மாற்றம் தேவை... மீண்டும் கொந்தளித்த ஹர்பஜன்! title=

திங்களன்று அறிவிக்கப்பட்ட இந்தியா அணிகளில் சூர்யகுமார் யாதவை தவிர்த்த தேர்வுக் குழுவை, பக்கச்சார்பான தேர்வுகுழு என சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்!

MSK பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழு நேற்றைய தினம், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் இருதரப்பு தொடர்களுக்கான இந்திய அணிகளையும், நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியா A அணியையும் பெயரிட்டது. இந்த வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் மறுக்கப்பட்டு இருக்கும் நிலையில்., தேசிய கிரிக்கெட் அணி தேர்வாளர்கள் பக்கச்சார்பானவர்கள் என்று ஹர்பஜன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தேசிய தேர்வாளர்களை சமீபகாலமாக பகிரங்கமாக விமர்சித்து வருகின்றார். மேலும் இந்த குழு "வெவ்வேறு வீரர்களுக்கு வெவ்வேறு விதிகள்" பின்பற்றுவதாகவும் அவர் அவதூறாக பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., "என்ன தவறு என்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்... குர்ய குமார் என்ன செய்துள்ளார்? என்று. டீம் இந்தியா, இந்தியா A மற்றும் இந்தியா B ஆகியவற்றிற்குத் தேர்வுசெய்யும் மற்றவர்களைப் போல ரன்கள் எடுப்பதைத் தவிர சூர்ய குமார் வேறு என்ன தவறு செய்தார் என எனக்கு தெரியவில்லை. வெவ்வேறு வீரர்களுக்கு ஏன் வெவ்வேறு விதிகள்? பின்பற்றப்படுகிறது" என குறிப்பிடுள்ளார்.

முன்னதாக கடந்த நவம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இருந்து விக்கெட் கீப்பர் சன்சு சாம்சன் மறுக்கப்பட்டதற்கு தனது வருத்தங்களை ஹர்பஜன் சிங் பதிவு செய்திருந்தார். மேலும் தேசிய கிரிக்கெட் அணி தேர்வாளர்கள் குழுவில் மாற்றம் தேவை, இதனை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குளி செய்வார் என நம்பிக்கை உள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது சூர்யகுமார் யாதவ் விவகாரத்தில் ஹர்பஜன் தேர்வு குழுவை மீண்டும் தாக்கியுள்ளார்.

முன்னதாக, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் இருதரப்பு தொடர்களுக்கான இந்திய அணிகளையும், நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியா A அணியையும் பெயரிட்டது. குறித்த அணி விவரங்கள் பின்வருமாறு...

இந்தியாவின் டி20 அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷவர்த் சடே , ஜஸ்பிரீத் பும்ரா, வாஷிங்டன் சுந்தர்

இந்தியாவின் ஒருநாள் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திரா குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ஜஸ்பிரீத் பும்ரா, ஷர்துல் தாக்கூர், மொஹமது ஷமி.

இரண்டு சுற்றுப்பயண போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் ஆட்டங்களுக்கான இந்தியா A அணி: பிருத்வி ஷா, மாயங்க் அகர்வால், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில் (கேப்டன்), சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹார்டிக் பாண்ட்யா, கிருனல் பாண்ட்யா, ஆக்சர் படேல், ராகுல் சாஹர், சந்தீப் வாரியர், இஷான் பொரல், கலீல் அகமது, மொஹமது ஸ்ரீராஜ்

முதல் நான்கு நாள் ஆட்டத்திற்கான இந்தியா A அணி: பிருத்வி ஷா, மாயங்க் அகர்வால், பிரியங்க் பஞ்சால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மான் கில், ஹனுமா விஹாரி (கேப்டன்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ஷாபாஸ் நதீம், ராகுல் சாஹர், சந்தீப் வாரியர் , அவேஷ் கான், மொஹமட். சிராஜ், இஷான் பொரல், இஷான் கிஷன்

இரண்டாவது நான்கு நாள் ஆட்டத்திற்கான இந்தியா A அணி: பிருத்வி ஷா, மாயங்க் அகர்வால், சுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஹனுமா விஹாரி (கேப்டன்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ஆர் அஸ்வின், ஷாபாஸ் நதீம், சந்தீப் வாரியர், அவேஷ் கான், மொஹமட். சிராஜ், இஷான் பொரல்.

Trending News