IND vs SA 1st Test: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே, டி20 தொடரை இரு அணிகளும் சமன் செய்த நிலையில், ஒருநாள் போட்டி தொடரை இந்தியா அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. தொடர்ந்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.
முதல் நாள் ஆட்டம் ரத்து?
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பின்னர் நடைபெறும் பாரம்பரியமிக்க பாக்ஸிங் டே போட்டியாக இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விளையாடப்படுகிறது. சென்சூரியன் நகரில் உள்ள சூப்பர்ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. தற்போது சென்சூரியனில் மழைக்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், நேற்று மாலை பெய்த மழையால் இந்திய அணியின் பயிற்சிகளும் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து, இன்று மதியம் 1 மணிக்கு போட்டியின் டாஸ் வீசப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மைதானத்தில் அதிக ஈரப்பதத்துடன் காணப்படுவதால் போட்டியின் டாஸ் 1.30 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக நடுவர்கள் அறிவித்தனர். இருப்பினும், 1.45 மணிக்கு டாஸ் வீசப்பட்டது, 2 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | அஷ்வின் 500 விக்கெட்டுகள்: தென்னாப்பிரிக்க தொடரில் சாதனை சாத்தியமாகுமா?
The toss and start of the 1st Test between South Africa and India have been delayed due to wet patches on the outfield.
Further inspection at 10:00 AM (1.30 PM IST)#SAvIND
— BCCI (@BCCI) December 26, 2023
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்தியா களமிறங்க உள்ள நிலையில், பிளேயிங் லெவனில் அஸ்வின் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகிய இருவருமே இடம்பெற்றுள்ளனர். அதிர்ச்சியளிக்கும் விதமாக, நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஜடேஜா முதுகுபிடிப்பு காரணமாக முதல் போட்டியில் விளையாடவில்லை என ரோஹித் சர்மா தெரிவித்தார். ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோர் உலகக் கோப்பைக்கு பின் முதல் முறையாக களமிறங்குகின்றனர். பிரசித் கிருஷ்ணா டெஸ்ட் போட்டியில் இன்று அறிமுகமாகிறார்.
மழை வாய்ப்பு?
போட்டி நடைபெறும் சென்சூரியன் நகரில், தற்போது பகலில் மழை பெய்ய 96% வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இன்று பகலில் சுமார் 4 மணி நேரம் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. செஞ்சுரியன் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. நாளைய ஆட்டத்தையும் மழை சற்று பாதிக்கும் என கணிக்கப்படுகிறது. இருப்பினும் கடைசி மூன்று நாள்கள் மழை பிரச்னை இருக்காது என்றும் போட்டி முழுமையாக நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
இந்தியா பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா
தென்னாப்பிரிக்கா பிளேயிங் லெவன்: டீன் எல்கர், ஐடன் மார்க்ரம், டோனி டி சோர்ஸி, டெம்பா பவுமா(கேப்டன்), கீகன் பீட்டர்சன், டேவிட் பெடிங்காம், கைல் வெர்ரேய்ன்(விக்கெட் கீப்பர்), மார்கோ யான்சன், ஜெரால்ட் கோட்ஸி, ககிசோ ரபாடா, நந்த்ரே பர்கர்
மேலும் படிக்க | 100 கோடி ரூபாய் கொட்டி கொடுத்து ஹர்திக்கை தூக்கிய மும்பை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ